மெளன விரதம் இருக்கும் பிரகாஷ் ராஜ்...என்ன காரணம் தெரியுமா ?
சென்னை : பலரின் ஃபேவரைட் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் இருப்பவர் பிரகாஷ் ராஜ். அண்ணாத்த, ஜெய்பீம் என வரிசையாக இவர் நடித்த படங்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகின்றன.
அதில் ஜெய் பீம் படத்தில் விசாரணை அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். பல காரணங்களால் சோஷியல் மீடியாவில் பிரகாஷ் ராஜை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதிலும் இந்தியில் பேசியதற்காக பிரகாஷ்ராஜ் ஒருவரை அடிப்பது போன்ற காட்சி, தமிழ் மற்றும் தெலுங்கு வெர்சன்களில் மிக கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

அதற்கு முன் திரைப்பட கலைஞர்கள் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. பலரின் எதிர்ப்பையும் மீறி பிரகாஷ் ராஜ் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தற்போது மெளன விரதம் இருக்க பயிற்சி எடுத்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். அதுவும் ஒரு வாரத்திற்கு மெளன விரதம் இருக்க போகிறாராம். இந்த விஷயம் தெரிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
பிரகாஷ் ராஜிற்கு மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சில காரணங்களால் குரல் வளைக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஒரு வாரத்திற்கு மெளன விரதம் இருக்க முடிவு செய்துள்ளாராம் பிரகாஷ் ராஜ்.
இது பற்றி பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கூறுகையில், டாக்டர்கள் முழு செக் அப் செய்தனர். நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய குரல் வளைக்கு மட்டும் தான் ஓய்வு தேவைப்படுகிறது ஒரு வாரத்திற்கு. அதனால் தான் மெளன விரதம். மெளனமாக இருக்க போகிறேன். தனது உடல்நலம் குறித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு அவர் தெரிவித்து வருகிறார்.
இதனால் பிரகாஷ் ராஜ் விரைவில் நலமடைந்து, தனது பணியை தொடர வேண்டும் என சோஷியல் மீடியாவில் ரசிர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பிரகாஷ் ராஜ் நலமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரகாஷ்ராஜ் தற்போது மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல மெகா பட்ஜெட் படங்களில் நடித்து முடித்துள்ளார். வரிசையாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











