twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி திணிப்பு... கொந்தளித்த பிரகாஷ் ராஜ்... என்ன சொன்னாரு தெரியுமா?

    |

    சென்னை : நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி திணிப்பை வன்மையாக கண்டித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

    பிரகாஷ் ராஜின் தாய்மொழி கன்னடம் என்றாலும், நான்கு தென்னிந்தியத் திரைப்படத் துறைகளிலும், ஹிந்தித் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

    பல்வேறு தென்னிந்தியத் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

    சட்டம் என் கையில் படத்தில் வித்தியாசமான சதீஷை பார்க்கலாம்... இயக்குநர் சாச்சி பரபர! சட்டம் என் கையில் படத்தில் வித்தியாசமான சதீஷை பார்க்கலாம்... இயக்குநர் சாச்சி பரபர!

    அமித் ஷா பேச்சு

    அமித் ஷா பேச்சு

    டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துப் பேசினார். அப்போது, இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி பேச வேண்டும். இந்தியை, ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார்.

    பலரும் எதிர்ப்பு

    பலரும் எதிர்ப்பு

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம்

    இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம்

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'உள்துறை அமைச்சரே உங்களின் இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களின் பன்முகத்தன்மையை விரும்புகிறோம். எங்கள் தாய்மொழியையும் அடையாளத்தையும் நேசிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    புரட்சிப் பெண்ணின் படம்

    புரட்சிப் பெண்ணின் படம்

    அதேபோல இசையமைச்சர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர் என்ற வரிகளை பதிவிட்டுள்ளார். சுமார் 50,000 பேர் அவரது ட்வீட்டை லைக் செய்துள்ளனர். 11,000 பேர் ரீ-ட்வீட்டும், 1,000-க்கும் மேற்பட்டோர் மேற்கோள் காட்டியும் அதனை ட்வீட் செய்துள்ளனர்.

    English summary
    Prakashraj tweets against Union Home Minister Amit Shah
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X