»   »  புலிக்கு பிறந்தது பூனையாகுமா?: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்- வீடியோ

திருவனந்தபுரம்: மோகன்லாலின் மகன் பிரனவ் மலையாள திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத சாதனையை செய்துள்ளார்.

மோகன்லாலின் மகனுக்கு அப்பா போன்று நடிகர் ஆகும் ஆசை இல்லாமல் கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்பினார். பின்னர் நண்பன் ஜீத்து ஜோசபின் வலியுறுத்தலால் ஆதி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே குடியரசு தினத்தன்று ரிலீஸானது.

பிரனவ்

பிரனவ்

ஆதி படம் ரிலீஸான 11 நாட்களிலேயே ரூ. 20 கோடி வசூல் செய்தது. முதல் படத்திலேயே பிரனவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.

பாராட்டு

பாராட்டு

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று பிரனவின் நடிப்பை பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆதி படம் ரூ. 50 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் அந்தோனி பெரும்பாவூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

மலையாளம்

மலையாளம்

மலையாள திரையுலகில் புதுமுக நடிகரின் முதல் படம் ரூ. 50 கோடி வசூல் செய்தது இதுவே முதல் முறை ஆகும். இதன் மூலம் மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்தவர் என்ற பெயர் எடுத்துள்ளார் பிரனவ். மகனின் சாதனையை பார்த்து நடிகர் மோகன்லால் பெருமை அடைந்துள்ளார்.

ஒப்பம்

ஒப்பம்

ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் மூன்றாவது படம் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக த்ரிஷ்யம் படம் ரூ. 50 கோடி வசூலித்தது. மலையாள திரையுலகில் முதன்முதலாக ரூ. 50 கோடி வசூல் செய்த படம் மோகன்லாலின் த்ரிஷ்யம். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான ஒப்பம் படமும் ரூ. 50 கோடி வசூலித்தது. தற்போது மோகன்லாலின் மகன் படமும் ரூ. 50 கோடி கிளப்பில் சேர்ந்துள்ளது. இந்த மூன்று படங்களையும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pranav Mohanlal's debut movie Aadhi has entered Rs. 50 crore club. Meanwhile, this is indeed a big achievement for Pranav Mohanlal, especially considering the fact that Aadhi was hid debut movie as a lead hero. It is for the first time that a Malayalam film of a debut actor is entering the coveted 50-Crore club at the worldwide box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X