Just In
- 24 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 47 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 55 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Lifestyle
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Automobiles
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்தாதுன்.... தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்தை இயக்கும் கவுதம் வாசுதேவ மேனன்
சென்னை: தேசிய விருது பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள நடிகர் தியாகராஜன், அதில் பிரசாந்த்தை நடிக்க வைக்கவும், கவுதம் வாசுதேவ மேனன் அந்தப் படத்தை இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1990களில் சாக்லேட் பாய் என திரையுலகை கலக்கியவர் நடிகர் பிரஷாந்த். தற்போது சில ஆண்டுகளாக அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து ஃப்ளாப்களாக இருக்கும் நிலையில் பிரசாந்த்தின் தந்தை நடிகர் மற்றும் இயக்குனர் தியாகராஜன் ஒரு அதிரடி முடிவை மகனுக்காக எடுத்துள்ளார்.

தி பியானோ டியூனர் என்ற பிரெஞ்சு படத்தை தழுவி இந்தியில் எடுக்கப்பட்டது ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த அந்தாதுன் திரைப்படம். சென்ற ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி வசூலை அள்ளியது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன்.
இப்படத்தின் பட்ஜெட் என்னவோ 32 கோடி ரூபாய் தான் ஆனால் வசூலில் வேட்டையடித்தது 450 கோடி ரூபாய்க்கும் மேல். சென்ற ஆண்டிற்கான சிறந்த திரைக்கதை, சிறந்த, நடிகர், சிறந்த திரைப்படம் என மூன்று பிரிவுகளிலும் தேசிய விருதை தட்டி சென்றது.
இந்த வெற்றிப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் ஆசைப்பட்டதாகவும் அதற்கான முயற்சிகள் மேற்கொண்டதாகவும் முதலில் செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அந்தாதுன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடிக்க உள்ளார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தாதுன் ஒரு மியூசிக்கல் த்ரில்லர் மூவி. நடிகர் பிரஷாந்தும் தேர்ந்த பியானோ பிளேயர். அவரது திறமையை இப்படத்தின் மூலம் வெளிக்காட்டலாம். அதனால் இப்படம் பிரஷாந்திற்கு மிகப் பொருத்தமாக அமையும் என்று நினைக்கிறார், அவரது தந்தை தியாகராஜன். மேலும் இப்படம் பல தேசிய விருதுகளை வென்றிருப்பதும் ஒரு காரணம்.
பிரஷாந்த்தை தவிர வேறு யாரும் இந்த படத்திற்கு இது வரையிலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. படத்தை இயக்குவதற்காக பல பெரிய இயக்குனர்கள் மட்டுமின்றி புதிய இயக்குனர்களை அணுகி அவர்களின் ஐடியாவை கேட்டுள்ளார் தியாகராஜன்.
தற்போது ஒரு பெரிய இயக்குனர் இப்படத்தை எடுத்துக்கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்த கௌதம் மேனன் தான் அந்த பெரிய இயக்குனர். அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதன் பிறகு தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு, அந்தாதுன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ மேனன் தான் அந்தாதுன் திரைப்படத்தை இயக்கப்போகிறார் எனும் தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் அது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படமாவது நடிகர் பிரஷாந்திற்கு ஒரு வெற்றிப்படமாக அமையட்டும்.