»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நடிகை பிரதியுஷா மர்மச் சாவு குறித்து சி.பி.ஐ. நேற்று முறைப்படி வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து இந்தச்சாவு குறித்த விசாரணையை சி.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

தமிழில் முன்னுக்கு வந்து கொண்டிருந்த பிரதியூஷா தனது ஹைதராபாத்தில் தனது காதலர் சித்தார்த் ரெட்டியுடன்தற்கொலை செய்து கொண்டதாக அம் மாநில போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், அவர் பல பேரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் சித்தார்த் ரெட்டிக்கும்தொடர்பிருப்பதாக பிரதியூஷாவின் தாயார் குற்றம் சாட்டினார்.

அவரது உடலில் நகக் கீறல்களும், கற்பழிக்கப்பட்டதான அடையாளங்களும் இருந்ததாக அவரது உடலை பிரேதப்பரிசோதைனை செய்த டாக்டர் கூறினார். ஆனால், வேறு டாக்டர்களைக் கொண்டு மீண்டும் பிரேதப் பரிசோதனைநடத்த அரசு உத்தரவிட்டது. இரண்டாவது பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்படவில்லை என்றும், தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் அறிக்கை தரப்பட்டது.

இதனால், இந்த கொலையில் சில அரசியல் பிரமுகர்களைக் காப்பாற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வதாககுற்றதச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த நாயுடு ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. நேற்று தான் இந்த வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது.

சித்தார்த் ரெட்டி, அவரது குடும்பத்தினர், பிரதியுஷாவின் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும்.பிரதியுஷாவின் உடலைப் பரிசோதனை செய்த டாக்டர் குழுவினரும் விசாரிக்கப்படுவார்கள்.

Read more about: actress, cinema, news, prathyusha, telugu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil