»   »  கர்ப்பிணி ராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி!

கர்ப்பிணி ராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ராணி முகர்ஜி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலிவுட் நடிகையும் ஆதித்யா சோப்ராவின் மனைவியுமான ராணி முகர்ஜி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து ராணி முகர்ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Pregnant Rani Mukherji admitted to hospital

ராணி முகர்ஜி பலவீனமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அவர் வீடு திரும்பினாலும் கூட முழுமையான ஓய்வில் அவர் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனராம்.

தூசி மற்றும் பிறவற்றில் இருந்து அவர் தள்ளி இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ராணி முகர்ஜிக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லாவிடினும் அவர் பார்ட்டிகளில் கலந்து கொண்டதால் மிகவும் சோர்வடைந்து விட்டாராம்.

இதனால் தான் தீபாவளி சமயத்தில் ராணி முகர்ஜி மருத்துவமனைக்கு செல்லக் காரணம் என்று உறுதியான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் ராணி முகர்ஜி முதல் குழந்தையை பெற்றெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Rani Mukherji who expecting has been hospitalized after Diwali celebrations, according to the media reports. Few days back rani was seen partying with the biggies of Bollywood industry and it has been said that she got extremely exhausted and was feeling uneasy afterwards and that is the reason the was taken to the hospital. Rani Mukerji is expecting her first child with filmmaker Aditya Chopra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil