»   »  எழுந்து நின்று பாடாததால் 8 மாத கர்ப்பமாக இருந்த பாடகி சுட்டுக் கொலை

எழுந்து நின்று பாடாததால் 8 மாத கர்ப்பமாக இருந்த பாடகி சுட்டுக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
மேடையில் பாடும்போதே சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தானிப் பாடகி!- வீடியோ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய 8 மாத கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா நகர் அருகில் இருக்கும் கங்கா கிராமத்தில் சுன்னத் கல்யாண நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சமீரா சிந்து(28) மேடையில் பாடல்கள் பாடியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பாடல்களை ரசித்துக் கேட்டுள்ளனர்.

கர்ப்பம்

கர்ப்பம்

சமீரா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் நின்று கொண்டு பாடாமல் சேர் போட்டு அமர்ந்து பாடினார். இதை பார்த்த ஒருவர் எழுந்து நின்று பாடுமாறு சமீராவிடம் கூற அவரோ தன்னால் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொலை

கொலை

சமீரா எழுந்து நின்று பாட மறுத்தவுடன் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சமீராவை நோக்கி சுட்டார். இதில் சமீரா பரிதாபமாக உயிர் இழந்தார்.

கைது

கைது

சமீராவின் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாரிக் ஜதோய் என்கிற அந்த கொலையாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

நிகழ்ச்சியில் ஜாலியாக துப்பாக்கியை எடுத்து விண்ணை நோக்கி சுட்டபோது குண்டு தவறுதலாக சமீரா மீது பட்டதாக தாரிக் தெரிவித்துள்ளார். தாரிக் துப்பாக்கியை காட்டி சமீராவை மிரட்டி சுட்டதாக அவரின் கணவர் ஆசிக் சம்மூ கூறியுள்ளார். எட்டு ஆல்பங்களை வெளியிட்டுள்ள சமீரா வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பாடி தான் சம்பாதித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 28-year-old pregnant singer named Samira Sindhu was shot dead in Pakistan after she refused to stand and sing on the stage at a circumcision celebration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X