விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது...உண்மையை ஓப்பனாக சொன்ன பிரேமலதா
சென்னை : நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்தின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தே ஓப்பனாக சொல்லி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
1980 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் விஜயகாந்த். வில்லன், ஹீரோ,கேரக்டர் ரோல் என அனைத்திலும் கலக்கியவர். ஆக்ஷன் படங்கள் என்றாலே விஜயகாந்த் படம் தான் என்னும் அளவிற்கு இமேஜை உருவாக்கி, ரஜினி - கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தவர் விஜயகாந்த். நடிகர், நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர்.

பிறகு தனிக்கட்சி துவக்கி, தேர்தலில் போட்டியிட்டி, எம்எல்ஏ, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் போன்ற பதவிகளையும் வகித்து, தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமைகளாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களையே எதிர்த்தவர் விஜயகாந்த். தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெலலிதாவிற்கு பிறகு மிகப் பெரிய ஆளாக வளர்ந்து, முதல்வர் ஆவார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமா, அரசியல் என இரண்டில் இருந்தும் ஒதுங்கி, வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார் விஜயகாந்த். இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு, காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டது.
விஜயகாந்த் விரைவில் குணமடைய நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து மற்றும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
இந்த சமயத்தில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த்தின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவரை அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலையை புரிந்து கொள்ள வேண்டும். ப்ளீஸ் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் குழப்பமடைந்துள்ளனர்.
விஜய்காந்த் உடல்நிலைக்கு என்னவாயிற்று. அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











