விஜய் சார் போனுக்காக வெயிட் பண்ணுறேன்...பல வருடமாக காத்திருக்கும் பிரேமம் டைரக்டர்

சென்னை : 2013ம் ஆண்டு நேரம் என்ற பைலிங்குவல் படத்தை இயக்கி டைரக்டராக சினிமாவிற்கு அறிமுகமானவர் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

முதல் படமே ஃபிளாப் ஆனதால் மலையாளம் பக்கம் சென்ற ஆல்போன்ஸ் புத்திரன், இரண்டாவது படமாக நிவின் பாலி, சாய் பல்லவியை வைத்து பிரேமம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, ரிலீஸ் செய்யப்பட்டது.

விஜய்யை இயக்குவீர்களா

விஜய்யை இயக்குவீர்களா

அல்போன்ஸ் புத்திரன் தற்போது இரண்டு மலையாள படங்களை இயக்கி வருகிறார். ஆனாலும் பிரேமம் படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் டைரக்டராகி விட்ட அல்போன்ஸ் புத்திரனிடம் மீண்டும் எப்போது தமிழ் படம் இயக்குவீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர், கோலிவுட் ஸ்டார் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என கேட்டார்.

ரொமான்டிக் படமா பண்ணுங்க

ரொமான்டிக் படமா பண்ணுங்க

தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா லிரிக்கல் வீடியோவை ஷேர் செய்திருந்தார். இதற்கும் ரசிகர் ஒருவர், விஜய்யை வைத்து ரொமான்டிக் படம் ஒன்றை பண்ணுங்க என கேட்டிருந்தார். ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் இதற்கு சோஷியல் மீடியாவிலேயே பதிலளித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

விஜய்யுடன் ரகசிய சந்திப்பா

விஜய்யுடன் ரகசிய சந்திப்பா

விஜய்யை வைத்து ரொமான்டிக் படம் எடுப்பீர்களா என கேட்ட கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படம் ரிலீசானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு வந்த முதல் போன் கால் விஜய்யிடம் இருந்து தான். அவரது மேனேஜரும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் என்னை கூப்பிட்டு பேசினார். விஜய்யை பர்சனலாகவும் ஒரு முறை சென்று சந்தித்தேன்.

ஒரே ஒரு போனுக்காக வெயிட்டிங்

ஒரே ஒரு போனுக்காக வெயிட்டிங்

ஒருநாள் நிச்சயம் என்னை விஜய் கூப்பிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக தான் காத்திருக்கிறேன். அப்படி அவர் என்னை கூப்பிடும் நாளில் நிச்சயம் விஜய் சாரை வைத்து இயக்கும் படமும் உறுதியாகும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரனே இப்படி சொல்லி விட்டதால் விஜய்யும் அல்போன்ஸ் புத்திரனும் ஒரே படத்தில் இணைந்தால் அது எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

Recommended Video

Director Shankar-க்கு காமெடியனாக நடிக்க வாய்ப்பு கொடுத்த SA Chandrasekhar | Part 2 | Filmibeat Tamil
லிஸ்ட் நீளமா போகுதே

லிஸ்ட் நீளமா போகுதே

நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தை முடித்து விட்டு, வம்சி பைடபள்ளி இயக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார் விஜய். அவரைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோர் விஜய்யை இயக்க காத்திருக்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது. விஜய்யை இயக்க காத்திருக்கும் டைரக்டர்கள் லிஸ்ட்டில் தற்போது அல்போன்ஸ் புத்திரனும் இணைந்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X