»   »  'பிரேமம்' டீம் இணைந்த புதுப் படத்தில் என்ன ஸ்பெஷல்?

'பிரேமம்' டீம் இணைந்த புதுப் படத்தில் என்ன ஸ்பெஷல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : 'பிரேமம்' நாயகன் நிவின் பாலி நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடைவேளா'. இந்தப் படத்தை அல்தாஃப் சலீம் எனும் இளம் இயக்குநர் இயக்கியிருக்கிறார். ''பிரேமம்' படத்தில் மேரியின் நண்பராக கூடவே வருகிற கேரக்டரில் நடித்தவர்தான் இந்த அல்தாஃப் சலீம்.

அல்தாஃப், கிருஷ்ணா சங்கர், சிஜு வில்சன் அடங்கிய பிரேமம் கூட்டணி இணைந்து உருவாகியிருக்கும் காமெடி படம் இது. ஏற்கனவே வெளிவந்த பாடலும், டீஸர்களுக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டிருக்கின்றன.

புதுவரவு இயக்குநர்களால் மலையாள சினிமாவின் பொற்காலமாகத் திகழ்கின்றன சமீப வருடங்கள். தங்களது நேட்டிவிட்டியையும், அரசியலையும் தங்களது படைப்புகளில் அழுத்தமாகப் பேசுகிறார்கள் சேட்டன்கள். இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடக் காத்திருப்பதற்கான காரணங்களைப் பார்க்கலாம் வாங்க...

ஆலுவா டீம் :

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'நேரம்' படத்தில் துவங்கியது இவர்களின் டீம். 'பிரேமம்' படத்தின் தவிர்க்கமுடியாத வெற்றியின் மூலம் இன்னும் பலமாக இருக்கிறது இந்த அணி. 'நண்டுகளின் நிலத்திலிருந்து' வெளிவரும் இந்தப் படமும் இந்த டீமை இன்னும் உச்சத்திற்குக் கொண்டுசெல்லுமா என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பிரேமம் படத்தில் மேரி மற்றும் செலின் ஆகியோருடன் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்குப் போகும் சிறுவனாக வருபவர்தான் படத்தின் இயக்குநர்.

'எந்தாவோ...' :

ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ரிங்டோனாகி இருக்கும் 'எந்தாவோ' பாடல் ஜாலியான மூட் செட் பாடல். நிவின் பாலி, ஐஸ்வர்யா லக்ஷ்மியின் மான்டேஜ் காதல் காட்சிகள், வண்ணமயமான குறும்புக் காட்சிகள் என மலையாள ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமாகி இருக்கிறது இந்தப் பாடல். ஜஸ்டின் வர்கீஸ் இசையில் சூரஜ் சந்தோஷ் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.

ஐஸ்வர்யா லக்ஷ்மி :

ஐஸ்வர்யா லக்ஷ்மி :

மலையாளத் திரையுலகின் மனங்கவர்ந்த நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மிதான் இந்தப் படத்தின் ஹீரோயின். பாலிவுட் லுக்கில் இருக்கும் இவரை பிரியங்கா சோப்ராவோடு ஒப்பிட்டுச் சிலாகிக்கிறார்கள் மலையாள வாலாஸ். இந்தப் படத்தின் மூலம் மேலும் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

அஹானா... :

அஹானா... :

'ஞான் ஸ்டீவ் லோபஸ்' படத்தில் நடித்த அஹானா கிருஷ்ணா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபர்ஹான் ஃபாசிலோடு இவர் இணைந்து நடிக்கும் 'பஷீரிண்டே பிரேமலேகானம்' படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் அவருக்கு மிக முக்கியமானது.

மீண்டும் சாந்தி கிருஷ்ணா :

மீண்டும் சாந்தி கிருஷ்ணா :

பல ஆண்டுகளாகத் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த பிரபல நடிகை சாந்தி கிருஷ்ணா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். 80, 90-களில் பலரின் நாயகியாக வலம் வந்தவர் இந்தப் படத்தில் நிவின் பாலியின் அம்மாவாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியானது . இவர் தமிழிலும் 'பன்னீர் புஷ்பங்கள்', 'சிவப்பு மல்லி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

English summary
'Njandukalude Nattil Oridavela' malayalam movie lead by Nivin pauly has got released today. Some reasons to watch this movie are heroine, subject and team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X