»   »  'மொரட்டு சிங்கிள் நாங்க...' - பிரேம்ஜி பகிர்ந்த பிரியா வாரியர் ரியாக்‌ஷன் மீம்!

'மொரட்டு சிங்கிள் நாங்க...' - பிரேம்ஜி பகிர்ந்த பிரியா வாரியர் ரியாக்‌ஷன் மீம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

சென்னை : கேரளாவை சேர்ந்த இளம் நடிகை பிரியா வாரியர். இவர் மீதுதான் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைதள இளைஞர்களும் காதலில் விழுந்துள்ளனர்.

தற்போது பிரியா பிரகாஷ் வாரியரின் மற்றொரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவரது கன் ரியாக்ஷன் அசத்தல் ரகம்.

சமூக வலைதளங்களில் பிரியா வாரியர் ரியாக்‌ஷன்ஸ் வைத்து மீம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரேம்ஜி ஒரு மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரியா பிரகாஷ் வாரியர்

பிரியா பிரகாஷ் வாரியர்

கேரளாவின் பிரியா பிரகாஷ் வாரியர் தான் தற்போதைக்கு சமூக வலைதளங்களின் சென்சேஷன் என்று சொல்லலாம். 'ஒரு அடார் லவ்' மலையாள படத்தில் வரும் பாடலில் அவரது ரியாக்ஷனுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் ஓவர் நைட்டில் அவர் பிரபலமாகிவிட்டார்.

பிரியா வாரியர் கன் ரியாக்‌ஷன்

பிரியா வாரியர் கன் ரியாக்‌ஷன்

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இன்னொரு டீசரையும் வெளியிட்டுள்ளனர் 'ஒரு அடார் லவ்' குழுவினர். இந்த டீசரில் பிரியா வாரியர் தன் கையை துப்பாக்கி போல வைத்துக்கொண்டு முத்தத்தை அதில் நிரப்பி காதலரைப் பார்த்துச் சுடுகிறார்.

அசந்துபோன ரசிகர்கள்

அசந்துபோன ரசிகர்கள்

புருவ நெரிப்பிலும், கண் சிமிட்டலிலும் ரசிகர்களைச் சொக்கவைத்த பிரியா வாரியரின் இந்த முத்த துப்பாக்கி ரியாக்‌ஷன் ரசிகர்களை அசரவைத்துள்ளது. காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

மொரட்டு சிங்கிள்

இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியரின் ரியாக்‌ஷனுக்கு மீம்களும் உருவாகி வருகின்றன. நடிகர் பிரேம்ஜி அமரன் 'மொரட்டு சிங்கிள்' மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'மங்காத்தா' படத்தில் அஜித் பிரேம்ஜியை சுடும்போது குண்டு அவரது கோட் பட்டனில் பட்டுத் தப்பிப்பார் பிரேம்ஜி. இந்த கான்செப்ட்டில் மீம் உருவாகியிருக்கிறது.

சிங்கிள் மீம்

சிங்கிள் : உனக்கு தான்டா இது வேலன்டைன்ஸ் டே... எனக்கு இது வெட்னஸ்டே!

ஏழு உயிரு

இப்போ ஸ்கூல் பசங்கலாம் இப்படி இருக்காங்க.. நாங்க ஸ்கூல் படிக்கும்போதெல்லாம்... "நான் பார்த்தேன்.. அன்டர்டேக்கருக்கு 7 உயிரு இருந்துச்சு"னு சொல்லிக்கிட்டு திரிஞ்சோம்.

English summary
Priya prkash varrier's gun shot reaction is going viral on social media. In this situation, Actor Premji Amaren shared Morattu single meme on priya varrier reaction on his twitter page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil