»   »  எந்தா ஒரு சாதனை.. "திரிஷ்யம், பிரேமம்" வரலாறுகளை முறியடித்தது 'என்னு நிண்டே மொய்தீன்'!

எந்தா ஒரு சாதனை.. "திரிஷ்யம், பிரேமம்" வரலாறுகளை முறியடித்தது 'என்னு நிண்டே மொய்தீன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரேமம், திருஷ்யம் படங்களின் வரலாற்றை முறியடித்து காதலின் மதிப்பை மீண்டும் ஒருமுறை உரக்க சொல்லியிருக்கிறது பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' திரைப்படம்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மலையாளத்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஏசியாநெட் சுமார் 6.87 கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறது.

இதுவரையில் எந்த ஒரு மலையாளப் படத்தின் சாட்டிலைட் உரிமையும் இவ்வளவு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னு நிண்டே மொய்தீன்

என்னு நிண்டே மொய்தீன்

உண்மையான ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிருத்விராஜ்-விமல் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் என்னு நிண்டே மொய்தீன். கிட்டத்தட்ட தமிழில் வெளியான 'பம்பாய்' படம் போன்றுதான் எனினும் இந்தப் படத்தில் பிருத்விராஜ்-பார்வதி இருவரும் கடைசிவரை ஒன்றிணைய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் மழை

வசூல் மழை

50 வருடங்களுக்கு முன்பான கதை என்றாலும் திரைக்கதையை அமைத்த விதம் ரசிகர்களைக் கவர்ந்து விட திரையரங்குகளுக்கு கூட்டம், கூட்டமாகப் போய் படத்தை பார்த்து ரசிகர்கள் அழ ஆரம்பித்தனர். விளைவு வெறும் 12 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடிகள் வரை வசூலித்து சாதனை புரிந்தது.

பிரேமம், திருஷ்யம்

பிரேமம், திருஷ்யம்

இந்நிலையில் இதுவரை எந்த ஒரு மலையாளப் படமும் செய்யாத ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மலையாளத்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஏசியாநெட் சுமார் 6.87 கோடிகளை கொடுத்து வாங்கியிருக்கிறது.இதுவரையில் எந்த ஒரு மலையாளப் படத்தின் சாட்டிலைட் உரிமையும் இவ்வளவு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாபெரும் பிளாக்பஸ்டர் படங்களான பிரேமம்(6 கோடி), திருஷ்யம்(6.5 கோடி) போன்ற படங்களின் சாட்டிலைட் உரிமை வரலாற்றை என்னு நிண்டே மொய்தீன் திரைப்படம் முறியடித்துள்ளது.

கர்ணன்

கர்ணன்

விமல்-பிருத்விராஜ் வெற்றிக் கூட்டணியில் மலையாளத்தின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக (45 கோடி) கர்ணன் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Prithviraj's Ennu Ninte Moideen Satellite Rights Sold by 6.87 Crores. This Movie Now Breaking the Record of Drishyam and Premam Satellite Rights.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil