Just In
- 12 min ago
பீப் வசனங்களுடன்.. அமேசான் பிரைமில் அன்கட் வெர்ஷனாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்.. டிரைலர் இதோ!
- 44 min ago
இளைஞருக்கு முத்தம் கொடுக்க போன ஜூலி.. இவர்தான் உங்க காதலரா? கேப்ஷனை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ!
- 1 hr ago
100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி புகார்!
- 2 hrs ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
Don't Miss!
- Automobiles
கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக்!! ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்
- Sports
எனக்கா வாய்ப்பு கொடுக்கலை? வெளுத்து வாங்கிய தமிழக வீரர்.. சிஎஸ்கேவிற்கு அனுப்பிய தரமான மெசேஜ்
- News
திருமங்கலம் பார்மூலா தெரியும்.. அதென்ன கோவை பார்மூலா?.. ஹாட்ரிக் வெற்றிக்கு பக்கா வியூகம்
- Finance
தொடக்கத்திலேயே சரிவு தான்.. 48,000 கீழ் சென்ற சென்செக்ஸ்..!
- Lifestyle
ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டெர்மினேட்டர் கெட்டப்பில் பிரித்விராஜ்... ஒருவேளை அந்தப் படத்தோட சீக்குவலா இருக்குமோ!
சென்னை : ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிப்பில் வெளியான டெர்மினேட்டர் லுக்கில் பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது ஆடுஜீவிதம் திரைப்படத்தில் அமலாபால் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
இவ்வாறு அடுத்தடுத்து அசரவைக்கும் அப்டேட்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரித்விராஜ் இப்பொழுது டெர்மினேட்டர் கெட்டப்பில் காரில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரபல திரைப்படத்தின் சீக்குவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மெழுகு சிலை போல.. பளபளக்கும் தமன்னா... எகிறும் ஹார்ட் பீட்!

திரையில் ஜொலித்து
இயக்குனர்களாக இருந்து இப்பொழுது நடிகர்களாக திரையில் ஜொலித்து வரும் சில இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரு சில நடிகர்களும் இப்பொழுது திரைப்படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்து வருகின்றனர்.

வசூல் மழையால் அலற வைத்தார்
அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பிரித்விராஜ் லூசிபர் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் முதல் திரைப்படத்திலேயே பாக்ஸ் ஆபிஸை வசூல் மழையால் அலற வைத்தார்.

லூசிபர்
ஏற்கனவே இவர் சில திரைப்படங்களை தயாரித்து வந்த போதிலும் இப்பொழுது இயக்கத்திலும் இறங்கியிருக்க மோகன்லால் நடிப்பில் உருவான லூசிபர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் திரில்லர் "ரணம்"
மலையாளத்தில் பிரபலமான நடிகராக இருப்பினும் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான பிரித்விராஜ் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான கதைகளில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள பிரித்திவிராஜ் 2018ஆம் ஆண்டு வெளியான சூப்பர் திரில்லர் "ரணம்" திரைப்படத்தில் நடித்து கலக்கியதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் வசூலில் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்தது

"ஐ வில் பி பேக்"
ரணம் திரைப்படத்தில் டெர்மினேட்டர் படத்தில் வரும் அர்னால்டை போல இருக்கும் இவரது புதுவிதமான கெட்டப் பலரையும் ரசிக்க வைத்திருந்த நிலையில், இப்பொழுது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "ஐ வில் பி பேக்" எனக் கூறியவாறு ரணம் திரைப்படத்தின் இயக்குனரை டேக் செய்துள்ளது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த திரைப்படம்
ஆடு ஜீவிதம், கோல்டு கேஸ் , ஜன கன மன, கடுவா உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் பிரித்விராஜ் இந்த பதிவின் மூலம் தனது அடுத்த திரைப்படம் ரணம் திரைப்படத்தின் சீக்குவல் தான் என ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரிவித்துள்ளது இப்பொழுது மலையாள திரைப்படத்துறையில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.