»   »  'இருக்கு ஆனா இல்ல' நடிகருக்கு ஜோடியாகும் 'மேயாத மான்'!

'இருக்கு ஆனா இல்ல' நடிகருக்கு ஜோடியாகும் 'மேயாத மான்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி பின்னர் சீரியல்களில் நடிக்க வாய்ப்புப் பெற்ற பிரியா பவானி ஷங்கர் 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், வைபவ் ஜோடியாக நடித்த 'மேயாத மான்' படத்திற்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் நடித்துள்ளார். அடுத்து, அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா.

Priya bhavani shankar to act with SJ suryah soon

இந்தப் படங்களுக்குப் பிறகு ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். 'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை', அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துவரும் 'இறவாக்காலம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நெல்சன் இயக்கும் படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

English summary
Actress Priya bhavani shankar to pair up with S.J.Suryah in Nelson's direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X