சன்னி லியோனையே அலேக்காக தூக்கி வீசிய பிரியா வாரியர்! #PriyaPrakashVarrier

By Vignesh Selvaraj

Recommended Video

பிரியா வாரியர்! #PriyaPrakashVarrier

சென்னை : 'ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.

பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியர் பற்றிய தகவல்கள் கூகுளில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றனவாம். அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வந்திருக்கிறார் பிரியா வாரியர்.

சென்சேஷன் நாயகி

சென்சேஷன் நாயகி

யூ-டியூப் பாடல்களின் மூலம் 'ஜிமிக்கி' கம்மல் ஷெரிலுக்கு பிறகு 'ஒரு அடார் லவ்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார். யார் இந்த பிரியா என்று பலரும் தற்போது தேட, கூகுள் தேடல் பட்டியலில் இந்திய அளவில் டாப் ஆகிவிட்டார் பிரியா.

ஒரு அடார் லவ்

ஒரு அடார் லவ்

'ஒரு அடார் லவ்' படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் ஶ்ரீனிவாசன் பாடியுள்ள 'மாணிக்ய மலராய பூவி' என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யூ-டியூபில் வெளியிடப்பட்டது.

 ஒரே வீடியோவில்

ஒரே வீடியோவில்

'மாணிக்ய மலராய பூவி' பாடலின் வீடியோ மூலம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். இந்தப் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

பிரியா வாரியர் ரியாக்‌ஷன்ஸ் சமூக வலைதளமெங்கும் செம வைரல் ஆனதைத் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர். தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்திருந்த பெயர் இந்திய அளவில் ட்ரெண்டானதால் யார் இவர் எனத் தேட ஆரம்பித்துவிட்டனர்.

யார் இந்த பிரியா

யார் இந்த பிரியா

இந்தியர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும், யார் இந்த பிரியா என தேட ஆரம்பிக்க, கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் டாப் இடத்தைப் பெற்றுவிட்டார் பிரியா. ஓவர் நைட்ல ஒபாமா ஆகுறதுனா இதுதானா?

சன்னி லியோனை முந்தினார்

சன்னி லியோனை முந்தினார்

கூகுளில் தேடலில் சன்னி லியோனுக்கு எப்போதும் டாப் இடம் உண்டு. இப்போது பாலிவுட் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துவரும் சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளி அதிகமாக சர்ச் ஆகி இருக்கிறார் பிரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X