»   »  அமலா மகன் படம் மூலம் ஹீரோயின் ஆகும் பிரபல நடிகையின் மகள்

அமலா மகன் படம் மூலம் ஹீரோயின் ஆகும் பிரபல நடிகையின் மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அகில் அகினேனி ஜோடியாக நடிக்க உள்ளாராம் நடிகை லிசியின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன்.

இயக்குனர் ப்ரியதர்ஷன், நடிகை லிசியின் மகள் கல்யாணி. தந்தையின் வழியில் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வந்தார். விக்ரமின் இருமுகன் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் தாயின் வழியில் நடிகையாகிறார்.

பிரனவ்

பிரனவ்

நடிகர் மோகன்லாலின் குடும்பமும், ப்ரியதர்ஷனின் குடும்பமும் நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் மோகன்லாலின் மகன் பிரனவ் கல்யாணியுடன் எடுத்த செல்ஃபி வைரலானது.

கல்யாணி

கல்யாணி

செல்ஃபியை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா ப்ரியதர்ஷனுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியந்தனர். கல்யாணி அழகாக இருக்கிறாரே நடிகையாகலாமே என்றனர்.

அகில்

அகில்

விக்ரம் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அகினேனி ஹீரோவாக நடிக்கிறார். அகிலுக்கு ஜோடியாக கல்யாணி நடிக்க உள்ளாராம்.

லிசி

லிசி

அகில் ஜோடியாக கல்யாணி நடிக்கவிருப்பதை அவரின் தாய் லிசி உறுதி செய்துள்ளார். ஆனால் கல்யாணியின் கதாபாத்திரம் குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

English summary
Director Priyadarshan's daughter Kalyani is all set to become an actress just like her mother Lissy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil