»   »  கோல்டன் க்ளோப் திரையிடலுக்கு ப்ரியதர்ஷனின் சில சமயங்களில் தேர்வு!

கோல்டன் க்ளோப் திரையிடலுக்கு ப்ரியதர்ஷனின் சில சமயங்களில் தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள தமிழ்ப் படமான சில சமயங்களில், அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள படம் சில சமயங்களில். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை அமலா பால் மற்றும் பிரபு தேவா தயாரித்துள்ளனர்.


Priyadharshan's Sila Samayangalil to be screened at Golden Globe

இந்தப் படம் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப ப்ரியதர்ஷன் ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.


அமெரிக்காவில் மிகவும் கவுரவமான விழாவாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது விழாவில் திரையிட சில சமயங்களில் படம் தேர்வாகியுள்ளது. வரும் அக்டோபர் 6-ம் தேதி பெவர்லி ஹில்லில் உள்ள ஒரு அரங்கில் இந்தப் படத்தை திரையிடவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

English summary
Sil Samayangalail, a Proyadharshan movie has been selected for screening at 74th Golden Globe award event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X