»   »  பிரியா மணி - முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் முடிந்தது!

பிரியா மணி - முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் முடிந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது.

பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி.இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.

Priyamani Gets Engaged To Boyfriend Mustufa Raj

ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி விரைவில் அவரின் காதலியாக மாறினார். இதுகுறித்து பிரியாமணி "நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரியாமணி-முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் வீட்டில் விமரிசையாக நடைபெற்றது.

Priyamani Gets Engaged To Boyfriend Mustufa Raj

இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருட இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' என்று சினிமா குறித்த கேள்விக்கு பிரியாமணி பதிலளித்திருக்கிறார்.

முன்னதாக மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான கோவிந்த் பத்ம சூர்யாவை, பிரியாமணி காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Priyamani got engaged to her boyfriend on 27 May, Friday at a Private Ceremony.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil