அப்போ நிருப் கையில மருதாணி போட்டீங்களா பிரியங்கா? #Priyankaவை டிரெண்ட் செய்து திட்டும் ரசிகர்கள்!
சென்னை: நான் ஒரு பாசிட்டிவ் கிரியேட்டர் என போலியாக வேஷமிட்டு ஓட்டுக்களை கவர திட்டமிட்ட பிரியங்காவின் முகத்திரை இரு வாரத்திலேயே கழண்டு விழுந்து விட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் ஹாஷ்டேக் போட்டு திட்டி வருகின்றனர்.
அக்ஷரா ரெட்டி பேப்பரில் எழுதி காட்டியது தவறு என சண்டை போட பிரியங்காவுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை என்றும் நிரூப் கையில் பிரியங்கா ஏன் எழுதி காட்டினார் என்றும் ஸ்க்ரீன் ஷாட் ஆதாரத்துடன் வெளுத்து வாங்கி வருகின்றனர் ரசிகர்கள்.
பாத்ரூமில் மோசமான ஆட்டத்தை போட்ட பிரியங்காவை பார்க்கவே அருவருப்பாக இருப்பதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அதுக்கும் மேல
போன சீசனில் அன்பு ஸ்ட்ராட்டஜியை பயன்படுத்தி ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டையும் கன்ட்ரோல் பண்ணதாக அர்ச்சனா குற்றம்சாட்டப்பட்டாலும் அனைவரையும் அனைத்து போன அம்மாவாகவே அவர் இருந்தார். ஆனால், இந்த சீசனில் களமிறங்கி உள்ள பிரியங்கா தனது பெயரை மொத்தமாக கெடுத்துக் கொண்டார். இவர் அதுக்கும் மேல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அக்ஷராவிடம் சண்டை
நான் கத்தி பேசி ஆர்ப்பாட்டம் பண்ணி நாமினேஷன் வரேன், நீ அழகா பேப்பரில் எழுதி காட்டி சேஃப் கேம் ஆடுறியான்னு அக்ஷராவிடம் வீண் வம்புக்கு வந்து பிரியங்கா போட்ட சண்டையில் எந்தவித சரியான நோக்கமும் இல்லை என்றும் அக்ஷ்ரா மீதான காழ்ப்புணர்ச்சி மட்டுமே காரணம் என்றும் திட்டி வருகின்றனர்.

டிரெண்டிங்கில் பிரியங்கா
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் ட்விட்டரில் #Priyanka என போட்டு நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அபிஷேக் ராஜாவே பரவாயில்லை. இந்த பிரியங்கா ஏன் இப்படி மாறிட்டார் என்றும் இல்லை இதுதான் இவரது சுயரூபமா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மருதாணி போட்டீங்களா
அக்ஷரா பேப்பரில் எழுதி ஃபிளஷ் செய்த விஷயத்தை வைத்து பஞ்சாயத்து பண்ணும் பிரியங்கா நிரூப் கையில் என்ன மருதாணியா போட்டார். அவரும் நாமினேட் செய்யும் நபர் பற்றித் தானே எழுதினார். மேலும், யாரையெல்லாம் நாமினேட் செய்தேன் என்பதை ரூல் புக்கை மீறி அடிக்கடி சொல்லியும் காட்டுகிறார் பிரியங்கா என்று அவரை வெளுத்து வருகின்றனர்.

பெரிய பைத்தியம்
பிக் பாஸ் வரலாற்றிலேயே இப்படியொரு மட்டமான போட்டியாளர்களை பார்க்கவில்லை என்றும் பிரியங்கா ஒரு பெரிய பைத்தியம் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் பயங்கர கடுப்பாகி அவரை திட்டி வருகின்றனர். எல்லாரும் இப்படி போட்டியாளர்களை கழுவி ஊற்றினால் தான் நாங்க டிஆர்பியை ஏற்றி ஜாலியாக கல்லா கட்ட முடியும் என பக்காவாக பிளான் பண்ணி இந்த சீசனை பிக் பாஸ் குழு நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











