இப்போ மட்டும் மக்கள் தீர்ப்பு என்னாச்சு? அபிஷேக் ராஜா என்ட்ரியும் ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷனும்!
சென்னை: 3வது புரமோவில் பேக் ஷாட்டில் காட்டியபோதே அபிஷேக் ராஜா தான் வைல்டு கார்டு என்ட்ரி என அறிவித்து விட்டோம்.
நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா 9ம் நம்பர் பாக்ஸை அண்ணாச்சி பின் பக்கமாக சென்று பிளான் போட்டு திறக்க அதிரடி என்ட்ரி கொடுத்தார்.
பாவனி, பிரியங்காவுக்கு அபிஷேக்கின் ரீ என்ட்ரி ஆனந்த கண்ணீரையே வரவழைத்து விட்டது.

யாரும் கிடைக்கல
46 நாட்கள் ஆகியும் இந்த் சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வர எந்த பிரபலமும் சம்மதம் தெரிவிக்கவில்லையா? என்று தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து மற்றும் அபிஷேக்கின் பெயர்கள் வைல்டு கார்டு என்ட்ரிக்கு அடிபட்ட நிலையில், அபிஷேக் ராஜா தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

குறைவான ஓட்டுக்களுடன்
கமல்ஹாசன் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அவதூறான கருத்துக்களை கூறி விட்டார் அபிஷேக் ராஜா என அந்த பட்டிமன்ற வீடியோ வைரலான நிலையில், முதல் வாரமே அபிஷேக் ராஜாவுக்கு வாக்குகள் குறைந்தன. ஆனால், நாடியா சங் முதல் நபராக வெளியேறினார். அதன் பிறகு அடுத்த வாரமே அபிஷேக் ராஜாவை வெளியே அனுப்பி வைத்தனர் மக்கள்.

பிரியங்கா பாவனி ஹாப்பி
அபிஷேக் ராஜா மீண்டும் வந்ததில் யாருக்கு சந்தோஷம் இருக்கிறதோ இல்லையோ பிரியங்கா மற்றும் பாவனி ரொம்பவே ஹாப்பி ஆகிட்டாங்க.. ஆரம்பத்தில் அபிஷேக் கூடலாம் பேசவே கூடாதுனு இருந்த பிரியங்கா அவருடன் பழக ஆரம்பித்த பிறகு அவர் வெளியேறியதும் உண்மையாகவே ஃபீல் பண்ணி அழுதார். அபிஷேக் மீண்டும் வந்த நிலையில், பிரியங்கா அபிநயை கட்டிப்பிடித்து அழுது புலம்பிவிட்டார்.

மக்கள் தீர்ப்பு என்னாச்சு
காயின் யூஸ் பண்ணி உன்னை காப்பாத்துறோம் அபிஷேக் என பாவனி உள்ளிட்ட போட்டியாளர்கள் கெஞ்சும் போது மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க இனிமே இங்கே இருந்தா அது நல்லா இருக்காது என வெளியேறிய அபிஷேக் ராஜா இப்போ மட்டும் மக்களின் தீர்ப்பை மதிக்காமல் மீண்டும் ஏன் வாய்ப்பு கேட்டு உள்ளே வந்தார் என்கிற கேள்வியை ஏகப்பட்ட நெட்டிசன்கள் வைத்து விளாசி வருகின்றனர்.

இனியாவது பரதநாட்டியம் ஆடுவாரா
பிக் பாஸ் வீட்டில் இருந்த 2 வாரத்தில் அத்தனை பேரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ண அபிஷேக் ராஜா இனியாவது பரதநாட்டியம் ஆடுவாரா? இல்லை இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் மக்கள் ஓட்டுக்கள் குறைந்து வெளியேற்றப்படுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











