லண்டனிலேயே செட்டில் ஆக போறீங்களா?...பிரியங்கா செயலால் குழம்பிய ரசிகர்கள்

சென்னை : சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் பிரியங்கா அருள் மோகன். முதல் படத்திலேயே க்யூட்டான எக்ஸ்பிரஷனால் ரசிகர்களை கவர்ந்து வந்தவர்.

Priyanka Arulmohan still in London...fans confused that why she stay in long time

இதை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தவர். டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கோலிவுட்டில் டைரக்டர்களால் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி உள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க பிரியங்காவிடம் கேட்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் லண்டனுக்கு வெகேஷனுக்காக சென்றார். பீஸ்ட் பட ரிலீசிற்கு பிறகு டாக்டர் பட டைரக்டர் நெல்சன் திலீப்குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்த போது பிரியங்கா அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

ஆனால் தற்போது வரை பிரியங்கா லண்டனில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று லண்டனின் க்ரீன்விச் பகுதியில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து Sunday Strolls என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் பேசிய பிரியங்காவிடம் பலர், என்ன லண்டனிலேயே செட்டில் ஆக போகிறீர்களா?

இனி கோலிவுட்டிற்கு திரும்பி வர மாட்டீங்களா. உங்களை மீண்டும் பெரிய திரையில் காண ஆவலாக காத்திருக்கிறேன் என கேட்டுள்ளனர். ஆனால் எப்போது பிரியங்கா இந்தியா வர போகிறார், எதற்காக இத்தனை நாட்கள் லண்டனில் தங்கி உள்ளார் என்பது பற்றி இதுவரை அவர் எதுவும் சொல்லவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகள் ரோலில் பிரியங்கா நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் தொடர்ந்து லண்டனிலேயே இருந்து வரும் பிரியங்கா, அடிக்கடி போட்டோக்களை மட்டும் வெளியிட்டு வருகிறார். இவர் எப்போது இந்தியா திரும்புவார் என தெரியாததால் என்ன பிளானில் இருக்கிறார் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X