பிரியங்கா சோப்ரா மோசடி செய்து உலக அழகிப் போட்டியில் வென்றாரா?… பத்த வச்ச மாடல் அழகி
அமெரிக்கா: 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றார்.
உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறந்தார்.
உலக அழகி, பாலிவுட் முன்னணி நடிகை என வலம் வந்த பிரியங்கா சோப்ரா மீது தற்போது மிகப் பெரிய மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2000 உலக அழகி பிரியங்கா சோப்ரா
2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றார். அதன் பிறகு விஜய்யுடன் தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர், அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் டாப் நடிகையாக கலக்கினார். ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்ட பின்னர், படங்களில் நடிப்பதையும் குறைத்துவிட்டார்.

பிரியங்கா சோப்ரா மீது குற்றச்சாட்டு
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது மோசடியானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை அவருடன் 2000ம் ஆண்டில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்ற முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி பகிரங்கமாக கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 2022 உலக அழகிப் போட்டியில் ஸ்பான்சரை முன்வைத்து சில முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை குறிப்பிட்டுள்ள லீலானி மெக்கோனி, 2000ம் ஆண்டிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்தன எனக் கூறி, அதற்காக விளக்கம் தெரிவித்து அவரது யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரியங்காவுக்கு முன்பே தெரியும்
"2000 மிஸ் வேர்ல்ட் போட்டியில் இதேபோன்ற நிலையை சந்தித்த நான், அதை அப்படியே கடந்து சென்றேன்" என லீலானி கூறியுள்ளார். மிஸ் இந்தியாவில் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு ஸ்பான்சர் செய்த ஜீ டிவி தான், உலக அழகிப் போட்டிக்கும் ஸ்பான்சராக இருந்தது. அதனால் பிரியங்கா சோப்ராவுக்கு பல சலுகைகள் கிடைத்தன. அந்தப் போட்டியில் பிரியங்கா எப்படி நீச்சலுடையிலும் சேலையிலும் போஸ் கொடுக்க அனுமதிக்கப்பட்டார் என்பதை விளக்கியுள்ளார். அதேபோல், மற்றவர்களுக்கு பிரியங்காவைப் போல உடைகள் அணிய அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தான் பட்டம் கிடைக்கும் என்பது பிரியங்காவுக்கு முன்னரே தெரியும் என்றும் லீலானி தெரிவித்துள்ளார்.

ஸ்பெஷலாக க்ரீம் பயன்படுத்தினார்
மேலும், பிரியங்கா சோப்ரா அவரது தோல் நிறத்தை சமன் செய்ய சில ஸ்கின் டோன் க்ரீமை பயன்படுத்தினார். அது ஒரு ப்ளீச்சிங் கிரீம் கிடையாது. ஆனால், அதுவும் அவருக்கு ப்ளஸ்ஸாகவே அமைந்தது. போட்டி தனக்கு சாதகமாக நடப்பது தெரிந்தும் பிரியங்கா சோப்ரா அதில் கலந்துகொண்டது தவறானது. முக்கியமாக பிரியங்கா சோப்ரா ஒத்திகைக்கு கூட செல்லவில்லை, மேலும் அவர் காலையில் உணவு சாப்பிடாமல் தவிர்த்தும் வந்தார்,. அதனால் அது அவரது அறைக்கு கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. மேலும், அவர் மட்டுமே பத்திரிகையாளர்களை சந்தித்தார், மற்ற போட்டியாளர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. பிரியங்காவின் உடையிலும் தனியாக கவனம் செலுத்தப்பட்டதாகவும், இறுதியில் பிரியங்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது மற்ற போட்டியாளர்கள் மேடையை விட்டு வெளியேறினர் என்று லீலானி கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க மோசடியானது என்றும் லீலானி குற்றம் சாட்டியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு புயலை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











