Don't Miss!
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒவ்வொரு வாரமும் அண்ணாச்சியை நாமினேட் பண்றேன்...ஓப்பனாக சொன்ன பிரியங்கா
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 62 வது நாளான இன்றைய எபிசோட்டை தொகுத்து வழங்க மீண்டும் கமல் வந்துள்ளார். தான் விரைவில் குணமடைய வேண்டிக் கொண்ட அனைவரின் அன்பிற்கும் வந்த உடனேயே நன்றி சொல்லி நிகழ்ச்சியை துவக்கினார் கமல்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் 61 வது நாள் நடைபெற்ற நிகழ்வுகள் காட்டப்பட்டன. இதில் ஆரம்பத்தில் வழக்கம் போல் சிறு பிரச்சனைகளுடன் துவங்கி, பிறகு பெயிண்ட் டாஸ்கில் அனைவரும் ஒற்றுமையாக விளையாடினர். இதற்காக வழங்கப்பட்ட பரிசினையும் சந்தோஷமாக ஹவுஸ்மேட்கள் பகிர்ந்து கொண்டனர்.

அண்ணாச்சியை நாமினேட் பண்றேன்
61 வது நாள் இரவு, பாவ்னியும் பிரியங்காவும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாவ்னியிடம், எனக்கும் அண்ணாச்சிக்கும் பிரச்சனை வந்த நாள் முதல் நான் அண்ணாச்சியை தான் நாமினேட் செய்கிறேன் என பிரியங்கா ஓப்பனாக சொல்கிறார். ஒவ்வொரு நாமினேஷனிலும் நான் அவரை நாமினேட் செய்கிறேன் என கூறுகிறார்.

எப்படி அடித்தேன் தெரியுமா
அவர் ஒன்னு பண்ணணும்னு நினைக்கிறார். அதை தான் பண்ண வேண்டும் என நினைக்கிறார். அதை வைத்து அனைவரையும் கவிழ்க்க வேண்டும் என நினைக்கிறார். அது முடியாது. அவரது கேம் ஸ்பிரிடிற்கு பணியவில்லை என்றால் அவர் ஒரு மாதிரி ஆகிறார். ஏத்தி விட்டு ஒன்னு பண்ணுகிறார். நானெல்லாம் அந்த ஸ்பிரே எப்படி அடித்தேன் தெரியுமா.

ஓப்பனாக பேசிய பிரியங்கா
என்ன நினைச்ச நீ. சும்மா புஷ்னு அடிச்சேன் என நினைக்கிறீயா. முகத்தில் ஒரு புள்ளி கூட தெரியாத அளவிற்கு அடித்தேன். நிரூப்பை பயன்படுத்தி தான் நான் எல்லாம் பண்ணனுமா. என்ன இது என கேட்கிறார் பிரியங்கா. இதை கேட்டு மிரட்சியும், குழப்பமும் கலந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார் பாவ்னி.

என்ன கோபம் அண்ணாச்சி மேல்
ஒவ்வொரு வாரமும் தான் தவறாமல் இமான் அண்ணாச்சியை நாமினேட் செய்வதை பிரியங்கா ஓப்பனாக பேசியதை பார்த்த நெட்டிசன்கள், பிரியங்காவிற்கு அண்ணாச்சி மீது அப்படி என்ன கோபம் என கேட்டு வருகின்றனர். நாமினேட் செய்தேன் என சொல்வதை கூட கோபமாகவே சொல்கிறாரே என கேட்டுள்ளனர்.

பிக்பாஸ் கண்டிக்கமாட்டாரா
பிக்பாஸ் விதிகளின்படி நாமினேட் பற்றி வெளியே சொல்லக் கூடாது. ஆனால் பிரியங்கா உள்ளிட்ட போட்டியாளர்கள் பலர் நாமினேஷன் பற்றி இவ்வளவு ஓப்பனாக மற்றவர்களிடம் பேசுகிறார்கள். இது விதிமீறல் ஆகாதா. இதை ஏன் பிக்பாஸ் கண்டிப்பது கிடையாது என நெட்டிசன்கள் பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.