சின்ன பொண்ணுக்கு டிஸ்லைக்...அக்ஷராவுக்கு லைக்கா...ராஜுவை கலாய்த்த பிரியங்கா
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ன் ஒன்பதாம் நாளான இன்று, அக்ஷரா தனது கதையை கூறினார். தான் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்ததாகவும், தனது தந்தை இறந்த பிறகு தனது அண்ணன் மற்றும் அம்மா தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கி பார்த்துக் கொண்டதாகவும் கூறினார் அக்ஷரா.
மாடலிங்கில் பல விஷயங்கள் செய்த போதும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார் அக்ஷரா. இதை கேட்டும் பலரும் லைக் கொடுத்தனர். அபிஷேக், பிரியங்கா ஆகியோர் மட்டும் டிஸ்லைக் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து அக்ஷராவிற்கு லைக், டிஸ்லைக் கொடுத்தது பற்றி பிரியங்கா, நிரூப், தாமரை ஆகியோர் ராஜுவிடம் பேசிக் கொண்டார்கள். அப்போது, நான் வாழ நினைத்த கஷ்டமில்லாத ஒரு வாழ்க்கை மற்றொருவருக்கு கிடைத்துள்ளது என்பதால் லைக் கொடுத்தேன் என விளக்கம் அளித்தார் ராஜு. சின்ன பொண்ணு சொன்னதில் கதையை சரியாக சொல்லவில்லை என சொன்ன நீ. இப்போ இந்த கதை உனக்கு ஓகே வா என கேட்டார்.
மிகவும் பாதுகாப்பாக வளர்ந்த ஒருவர் இதை விட இந்த கதையை எப்படி சொல்ல முடியும். அதனால் தான் லைக் கொடுத்தேன் என்றார் ராஜு. ஆனால் எல்லோர் முன்னிலையிலும் இன்னும் நீ முன்னேற வேண்டும் என்பதற்காக தான் டிஸ்லைக் கொடுத்தேன் என சொன்ன பிரியங்கா, ராஜூவிடம் பேசுகையில், அவள் சொன்ன கதை சுத்தமாக எனக்கு கனெக்ட் ஆகவில்லை. அதனால் தான் டிஸ்லைக் கொடுத்தேன் என்ற உண்மையை உடைத்தார்.
இது பற்றி அக்ஷராவிடமே பேசும் ராஜு, சின்ன பொண்ணு பஸ்ஸில் பிள்ளை உருண்டு போனதை சொன்ன போது டிஸ்லைக் கொடுத்தாய். இப்போது எனக்கு லைக் கொடுத்திருக்கிறாய் என என்னிடம் கேட்கலாம். எல்லோரும் உனக்கு டிஸ்லைக் கொடுத்ததை உன்னால் தாங்க முடியவில்லை. இப்போது நானும் டிஸ்லைக் கொடுத்தால் நீ வருத்தப்படுவாய். அதனால் தான் லைக் கொடுத்தேன் என்றார்.
நீ என்னை ரசிப்பது. நான் கதை சொல்வதை கவனமாக கேட்கிறாய். அது எனக்கு பிடிக்கும். அதனால் தான் லைக் கொடுத்தேன் என்றார். இதற்கு பதிலளித்த அக்ஷரா, மற்ற எல்லோரும் இரக்கப்பட்டு லைக் கொடுப்பார்கள். ஆனால் நீங்க எனக்கு டிஸ்லைக் கொடுப்பீங்கன்னு நினைச்சேன். ஆனால் நீங்க லைக் கொடுத்தீங்க என்றார்கள்.


Click it and Unblock the Notifications











