தளபதி 63: இன்னும் பூஜைகூட போடல.. ஆனா, அதுக்குள்ள பிரச்சினை ஆரம்பமாகிடுச்சு!

தளபதி 63 கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 63படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 21ம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது.

மெர்சல், சர்கார் வரிசையில் இந்த படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விஜய் பயிற்சி:

விஜய் பயிற்சி:

இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட அணியை பற்றிய கதை எனக் கூறப்படுகிறது. பயிற்சியாளராக நடிக்கும் விஜய், அதற்கென தனது உடல் அமைப்பை மாற்றி தேவையான பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்.

கதைப் பிரச்சினை:

கதைப் பிரச்சினை:

இது ஒருபுறம் இருக்க, இப்படம் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பும் இப்போதே கிளம்பி விட்டது. பெண்கள் விளையாட்டையும், அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் வைத்து உருவாகும் இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாக:

சட்டரீதியாக:

இப்படக்கதை தன்னுடையது தான் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள செல்வா, விஜயின் தீவிர ரசிகனான தான் இந்தக் கதையை விஜயை வைத்தே இயக்குவேன் எனக் கூறுகிறார். அதோடு, இந்தப் பிரச்சினையை சட்டரீதியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்கார் பிரச்சினை:

சர்கார் பிரச்சினை:

ஏற்கனவே, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் இதே போன்று பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது நினைவுக் கூரத்தக்கது. அந்த வரிசையில் இன்னும் பூஜை கூட போடாத இப்படத்திற்கு இப்போதே பிரச்சினை ஆரம்பித்துள்ளது விஜய் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X