மாணவிகளின் புகாரை பார்த்து மனசே உடைஞ்சு போச்சு.. ஆசிரியரின் சில்மிஷம்.. அர்ச்சனா கல்பாத்தி உருக்கம்!
சென்னை: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்து பிரபல தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன்.
இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு ஆபாசமாக வாட்ஸ்அப் மெஸேஜ் அனுப்புவது, அநாகரிகமாக பேசுவது என இருந்து வந்துள்ளார்.

ஆசிரியர் சில்மிஷம்
மேலும் ஆன்லைன் வகுப்பிலும் அரைகுறை ஆடையுடன் தோன்றியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் மாணவர்கள் அளித்த புகார் குறித்த விஷயங்கள் வெளியாக விஷயம் பூதாகரமானது. பலரும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறையில் அடைக்க உத்தரவு
இந்நிலையில் நேற்றிரவு ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

அர்ச்சனா கல்பாத்தி
இதனை தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் ராஜகோபாலனின் பாலியல் தொல்லை குறித்து குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனம் உடைந்தது
பாலியல் துன்புறுத்தல்களை இயல்பாக்க முடியாது. முன்னாள் மாணவியாக பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பற்றிய மாணவர்களின் புகார்களை பார்த்து மனம் உடைந்தது. நாம் இதனை பெரிதுப்படுத்துவதன் மூலம் இது உரிய நபரை சென்றடைந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உதவும். தங்களுக்கு நடந்த கொடுமையை தைரியமாக பகிர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் எனது அன்பும், அரவணைப்பும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











