ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் கேஜிஎஃப் 3...ரிலீஸ் தேதியையே அறிவித்த தயாரிப்பாளர்

சென்னை : கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையை தொடர்ந்து கேஜிஎஃப் 3 படத்தை இயக்க போவதாக சமீபத்தில் அறிவித்தார் டைரக்டர் பிரசந்த் நீல் அறிவித்தார். ஆனால் அதற்கும் ஒரு படி மேலே போய் ரிலீஸ் பற்றிய அப்டேட்டையும் வெளியிட்டு விட்டார் தயாரிப்பாளர்.

கன்னட டைரக்டர் பிரசாந்த் நீல் 2018 ம் ஆண்டு இயக்கிய கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டது உருவாக்கப்பட்டது கேஜிஎஃப் 2. இந்த ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம், பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. பல படங்களின் சாதனைகளை முறியடித்து திரையுலகையே மிரள வைத்துள்ளது.

கேஜிஎஃப் 2 ஒரு மாத வசூல் எவ்வளவு

கேஜிஎஃப் 2 ஒரு மாத வசூல் எவ்வளவு

அதிகம் வசூலித்த இந்திய படங்களின் பட்டியலில் டங்கள், ஆர்ஆர்ஆர் படங்களின் சாதனையை முறியடித்து 2வது இடத்தில் உள்ளது கேஜிஎஃப் 2. ரிலீசான 30 நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 1180 கோடிகளை வசூல் செய்துள்ளது. விரைவில் 1200 கோடி வசூல் செய்து படங்களின் பட்டியலில் இணைய உள்ளது கேஜிஎஃப் 2. படத்தின் வசூல் குறையாமல் சென்று கொண்டிருப்பதால் அதிகம் வசூல் செய்த இந்திய படமான பாகுபலி 2 வசூல் சாதனையான 1800 கோடியையும் கேஜிஎஃப் 2 எட்டுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கேஜிஎஃப் சாப்டர் 3 கதை என்ன

கேஜிஎஃப் சாப்டர் 3 கதை என்ன

மும்பை டானாக இருந்த ராக்கி பாய், எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்பதை சாப்டர் ஒன்றிலும், ராக்கி பாய் எப்படி மான்ஸ்டராக வளர்க்கிறார், கேஜிஎஃப்பை எவ்வாறு ஆள்கிறார் என்பதை சாப்டர் 2 லும் காட்டினார்கள். கேஜிஎஃப் 2 படத்தின் இறுதியில் கடலில் மூழ்குவதாக காட்டப்படும் ராக்கி பாய் என்ன ஆவார் என்பது தான் கேஜிஎஃப் 3 படத்தில் பிரம்மாண்டமாக காட்டப்பட உள்ளதாம். கேஜிஎஃப் இரண்டு பாகங்களிலும் யாஷ் தனது மிரட்டலாக நடிப்பை வெளிப்படுத்தி, பான் இந்தியன் ஸ்டாராகி விட்டார். கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு ஒட்டுமொத்த சினிமாவின் பார்வையும் கன்னட சினிமா பக்கம் திரும்பி உள்ளது.

தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் 3 ம் பாகத்தை இயக்க போவதாக பிரசாந்த் நீல் அறிவித்தார். ஆனால் படத்தின் சில சீன்கள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக யாஷ் தனது பேட்டியில் கூறி இருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்துர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறுகையில், பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சாலர் படத்தை இயக்கி வருகிறார். இதன் 30 முதல் 35 சதவீதம் ஷுட்டிங் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்ட ஷுட்டிங் வரும் வாரத்தில் துவங்கும். இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சாலர் ஷுட்டிங் நிறைவடையும்.

அடேங்கப்பா பான் வேர்ல்டு பிளானா இருக்கே

அடேங்கப்பா பான் வேர்ல்டு பிளானா இருக்கே

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு கேஜிஎஃப் 3 படத்தின் ஷுட்டிங்கை துவக்க திட்டமிட்டுள்ளோம். கேஜிஎஃப் 3 படத்தை Marvel kind of Universe படத்தை போல் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். வித்தியாசமாக படங்களில் இருந்து வித்தியாசமான கேரக்டர்களை இதில் காட்ட முடிவு செய்துள்ளோம். Doctor Strange அல்லது, Spider Man படங்களைப் போல் அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களையும் ஈர்க்கும் வகையில் கேஜிஎஃப் 3 படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

ரிலீஸ் தேதி வரை முடிவாகிடுச்சா

ரிலீஸ் தேதி வரை முடிவாகிடுச்சா

2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேஜிஎஃப் 3 படத்தின் ஷுட்டிங் துவங்கப்படும். 2024 ம் ஆண்டு கோடை விடுமுறையில் கேஜிஎஃப் சாப்டர் 3 ரிலீஸ் செய்யப்படும். 2023 ம் ஆண்டு முழுவதையும் கேஜிஎஃப் 3 படத்திற்காக செலவிட உள்ளோம். பிரசாந்த் நீலுக்காக தான் காத்திருக்கிறோம். அவர் தற்போது இயக்கும் சாலர் படத்தை முடித்ததும் முழு கவனத்தையும் கேஜிஎஃப் 3 படத்தில் செலுத்த உள்ளார் என்றார் விஜய் கிரகந்ததுர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X