»   »  பணத்தோடு கம்பி நீட்டிய நடிகையின் மேனேஜர்.. போலீசுக்குப் போகும் தயாரிப்பாளர்!

பணத்தோடு கம்பி நீட்டிய நடிகையின் மேனேஜர்.. போலீசுக்குப் போகும் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்புக்கு வராததால் தயாரிப்பாளருக்கு ரூ 3 லட்சம் நஷ்டம் என்று செய்தி வெளியிட்டிருந்தோமே.. நினைவிருக்கிறதா?

இப்படி ஒரு நிலைமை ஏற்பட முக்கிய காரணம் அந்த நடிகையின் மேனேஜரான ஷான் என்பவர்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தின் இறுதி நாள் ஷூட்டிங்கில் பங்கேற்கும் முன் முழுப் பணத்தையும் தயாரிப்பாளர் செட்டில் செய்திருந்தார். அந்தப் பணத்தை நடிகையின் சார்பில் பெற்றவர் இந்த ஷான்தான்.

Producer decides to lodge complaint against actress, manager

ஆனால் தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை நடிகைக்குத் தராமல் அப்படியே கம்பி நீட்டிவிட்டார் ஷான். இது தெரியாமல் தயாரிப்பாளர் இங்கே நடிகைக்காக காத்திருக்க, நடிகையோ வேறு ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள தயாரிப்பாளர் எவ்வளவோ முயன்றும் ஷானின் போன் ஸ்விட்ச் ஆஃப். நடிகையோ போனை எடுக்கவே இல்லை.

வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் போலீசுக்குப் போக முடிவு செய்துவிட்டார். விஷயம் அறிந்த நடிகை, 'அந்த நபரை நான் இரண்டு நாட்களுக்கு முன்பே டிஸ்மிஸ் செய்துவிட்டேன். எனக்குத் தெரியாமல் எப்படி காசு தரலாம்?' எனக் கேட்க, 'அவரை நீக்கியதை நீதானேம்மா முதல்ல எல்லாருக்கும் சொல்லணும்?' என தயாரிப்பாளர் எகிற... பிரச்சினை இன்னும் நீள்கிறது.

அநேகமாக இன்றோ நாளையோ போலீஸுக்குப் போகப் போகிறாராம் தயாரிப்பாளர்!

English summary
The producer of Marainthirunthu Paarkkum Marmam Enna has decided to lodge police complaint against actress Aishwarya Dutta and his manager.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil