»   »  பிரபல பட தயாரிப்பாளரின் மனைவி மாரடைப்பால் மரணம்

பிரபல பட தயாரிப்பாளரின் மனைவி மாரடைப்பால் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜுவின் மனைவி அனிதா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் மனைவி அனிதா. அனிதா தனது கணவருடன் சேர்ந்து படம் வினியோகிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

Producer Dil Raju's wife dies of cardiac arrest

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனக்கு நெஞ்சு வலிப்பதாக அனிதா தெரிவித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் மரணம் அடைந்தார். அனிதா மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் பட வேலை காரணமாக அமெரிக்காவில் இருந்த தில் ராஜுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர் அமெரிக்காவில் இருந்து கிளம்பி ஹைதராபாத்திற்கு நேற்று வந்தார். அனிதாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Popular Tollywood producer Dil Raju's wife Anitha passed away in Hyderabad due to cardiac arrest.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil