“பிரைவேட் ஜெட்ல ஹனிமூன் போறோம்”: Wanted-ஆக வந்து வண்டியில் ஏறும் லிப்ரா ரவி, மகாலட்சுமி ஜோடி

சென்னை: தமிழில் சுட்ட கதை, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்தவர் லிப்ரா ரவி எனப்படும் ரவிந்திரன் சந்திரசேகரன்.

இவர் கடந்த வாரம் சின்ன திரை நடிகை மகாலாட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்த காதல் ஜோடி குறித்து தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வதந்திகளும் ஒருசேர வெளிவந்து கொண்டிருக்கின்றன.

லிப்ரா ரவி இரண்டாவது திருமணம்

லிப்ரா ரவி இரண்டாவது திருமணம்

தமிழித் திரையுலகின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் லிப்ரா ரவி எனப்படும் ரவிந்திரன் சந்திரசேகரன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், முதல் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் சின்ன திரை நடிகை மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டிங்கில் புதுமண தம்பதி

ட்ரெண்டிங்கில் புதுமண தம்பதி

தமிழில் முன்னணி சீரியல் நடிகையாக வலம்வரும் மஹாலட்சுமி, தேவதையைக் கண்டேன், செல்லமே, அரசி, கேளடி கண்மணி வாணி ராணி, பொண்ணுக்கு தங்க மனசு என ஏராளமான நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், திருமணத்திற்குப் பின்னர் ரவீந்திரன் - மகாலட்சுமி தம்பதியினர் ரொமன்ஸ் செய்யும் போட்டோகளும், வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் செம்ம ட்ரெண்டாகின.

விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்

விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்

"மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு சொல்வாங்க. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கைல கிடச்சா? Coming soon live in FAT MAN FACTS... Kutty story with my pondatiiiii" என திருமண நாளின் போது லிப்ரா ரவி பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் ரீல்ஸ் செய்த வீடியோக்களையும் ஷேர் செய்துவந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், லிப்ரா ரவியின் உருவத்தை வைத்து ட்ரோல் செய்தனர். ஆனால், அவை எதையும் கண்டுகொள்ளாத ரவீந்திரன் - மகாலட்சுமி ஜோடி, தங்கள் திருமண வாழ்வை கொண்டாடி வருகின்றனர்.

பிரைவேட் ஜெட்டில் ஹனிமூன்

பிரைவேட் ஜெட்டில் ஹனிமூன்

லிப்ரா ரவி, மகாலட்சுமி ஜோடியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வரும் நெட்டிசன்களுக்கு, அவர்களாகவே ஒரு கண்டெண்ட் கொடுத்து கலாய்த்துள்ளனர். விமானம் ஒன்றின் முன்னால் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை தனது முகநூலில் ஷேர் செய்துள்ள ரவீந்திரன், "தயாரிப்பாளர் ரவீந்திரன் மனைவி மகாலட்சுமியுடன் பிரைவேட் ஜெட்டில் ஐஸ்லாந்தில் உள்ள தீவுக்கு ஹனிமூன் செல்கிறார். தயவுசெஞ்சு இப்படி மட்டும் சொல்லிடாதீங்க மக்களே, திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் பகுதில இருக்குற குலதெய்வ கோயிலுக்கு தான் போறேன். இதையும் வச்சு செஞ்சுடாதீங்கப்பா" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவால் லிப்ரா ரவி - மகாலட்சுமி ஜோடி மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X