கப்பு முக்கியம் பிகிலு...ராஜுவுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 35 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. இன்றோடு இந்த நிகழ்ச்சி ஐந்து வாரங்களை நிறைவு செய்துள்ளது.
18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 4 பேர் வெளியேறி உள்ளனர். தற்போது 14 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். முந்தைய சீசன்களை போல் இந்த சீசனிலும் விஜய் டிவி பிரபலங்களான ராஜு ஜெயமோகன் மற்றும் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

டைட்டில் வெல்வாரா
கடந்த ஐந்து வாரங்களில் ரசிகர்கள் மட்டுமல்ல, பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரின் மனங்களையும் கவர்ந்து விட்டார் ராஜு. இதனால் இந்த சீசனின் டைட்டிலை ராஜு தான் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட துவங்கி விட்டது.

பல சீரியல்களில் நடித்த ராஜு
கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிக்க வந்த ராஜு, கடந்த 10 ஆண்டுகளாக பல சீரியல்கள், படங்களில் நடித்துள்ளார். சரவணன் மீனாட்சி சீரியலில் கவினின் ஃபிரண்டாக ராஜு நடித்திருப்பார். பிறகு ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இரண்டாவது ஹீரோ
ராஜு, டைரக்டர் பாக்யராஜிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றியவர். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் இரண்டாவது ஹீரோவாக ராஜு நடித்துள்ளார்.

காதல் திருமணம்
பல ஆண்டுகளாக காதலித்து வந்த தாரிகாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ராஜு. திருமணமான சமயங்களில் பல மீடியாக்களில் பேட்டி அளித்தனர். தங்களின் காதல் கதை பற்றிய பல நிகழ்வுகளை கலகலப்பாக பகிர்ந்து கொண்டனர்.

தனிமையில் திருமணநாள்
காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி, தங்களின் முதல் திருமண நாளன்று ஒன்றாக சேர்ந்து இருக்கவில்லை. ராஜு, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டதால், இருவரும் தனித்தனியாக தான் திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.

கப்பு முக்கியம் பிகிலு
இந்நிலையில் ராஜு நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சோஷியல் மீடியாவில் ராஜு - தாரிகாவின் திருமண ஃபோட்டோவை பதிவிட்டு அதோடு, ஹேப்பி மேரிட் லைஃப் ராஜு. கப்பு முக்கியம் பிகிலு என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். பிகில் பட விஜய் ஸ்டைலில் பதிவிட்டுள்ள இந்த வாழ்த்து அனைவரையும் கவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











