Just In
- 1 min ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- 22 min ago
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- 1 hr ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- 1 hr ago
சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்!
Don't Miss!
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Sports
ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிமிக்கி கொடுக்கும் சிம்பு... முட்டுக்கட்டை போடுமா தயாரிப்பாளர் சங்கம்
சென்னை: நடிகர் சிம்பு மீது 5 தயாரிப்பாளர்கள் அளித்த புகார் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேரம் தவறாமை என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் என்ன என்று அகராதியில் தேடினால் அங்கு சிம்பு என்று தான் குறிப்பிட்டிருக்கும். அந்த அளவுக்கு ரொம்ப பொருத்தமாக இருப்பார் போல.

இவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கி விட்டால், அந்த நொடியில் இருந்து அந்த தயாரிப்பாளர் சிம்புவுக்கு அடிமைதான். ஒழுங்காக படப்பிடிப்பு தொடங்கி, அவரும் குறித்த நேரத்திற்கு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்து, படப்பிடிப்பு முடிந்து, சிம்புவும் டப்பிங் பேசி அவருடைய போர்ஷன் அனைத்தும் முடித்தால் தான் உண்டு.
சிக்கனை வைத்து சேரனை அசிங்கப்படுத்திய லாஸ்லியா.. கமல் முன்னிலையிலேயே பழிக்குப்பழி!
இல்லாவிட்டால், அந்த தயாரிப்பாளருக்கு அஷ்டமத்துச் சனி ஆரம்பமாகிவிட்டது என்று தான் சொல்லணும். அப்படி இருந்தாலும், எந்த நம்பிக்கையில், தயாரிப்பாளர்கள் திரும்பத் திரும்ப சிம்பு சிம்பு என்று அவரிடமே வம்படியாக போய் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளார். படத்தின் 2ஆம் பாகத்தில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு சிம்பு மறுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் சிம்புவை வைத்து படம் தயாரித்து வந்தார். அந்த படம் பாதியில் நிற்பதாக அவரும் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதனும் தனது படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்தும் பட வேலைகள் தொடங்கவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
கொரில்லா படத்தை தயாரித்த சுரேஷும் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்பணம் கொடுத்ததாகவும், ஆனால் படப்பிடிப்பை இன்னும் தொடங்க முடியவில்லை என்று புகார் அளித்துள்ளார். இறுதியாக சிம்புவை வைத்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்த மாநாடு படமும் நின்று போனது.
இந்நிலையில், சிம்பு மீது 5 தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளதாகவும், அதன் மீது தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், தயாரிப்பாளர்களுக்கு சிம்பு இழப்பீடு வழங்குவது குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.