»   »  பெண் பட தயாரிப்பாளரை வயிற்றில் எட்டி உதைத்த தயாரிப்பாளர் விஜய்

பெண் பட தயாரிப்பாளரை வயிற்றில் எட்டி உதைத்த தயாரிப்பாளர் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தன்னை வயிற்றில் எட்டி உதைத்த தயாரிப்பாளர் விஜய் பாபு மீது சக தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த நண்பர்களான சான்ட்ரா தாமஸும், விஜய் பாபுவும் சேர்ந்து ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற மலையாள பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள். அவர்கள் மோகன்லாலின் படம் உள்பட 10 படங்களை தயாரித்துள்ளனர்.

சான்ட்ரா, விஜய் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

திருமணம்

திருமணம்

சான்ட்ராவுக்கு திருமணம் முடிந்த பிறகு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விலகுமாறு அவர் விஜய் பாபுவை கேட்டார். தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவருடன் சேர்ந்து நடத்த சான்ட்ரா திட்டமிட்டார்.

விஜய் பாபு

விஜய் பாபு

கஷ்டப்பட்டு துவங்கி நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விலக விஜய் பாபு மறுத்தார். இதனால் விஜய் பாபுவும், சான்ட்ராவும் எதிரிகள் ஆகிவிட்டனர்.

மோதல்

மோதல்

தயாரிப்பு நிறுவன பிரச்சனை தொடர்பாக சான்ட்ராவுக்கும், விஜய் பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது விஜய் சான்ட்ராவை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.

மருத்துவமனை

மருத்துவமனை

விஜய் உதைத்ததில் காயம் அடைந்த சான்ட்ரா கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் விஜய் பாபு மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Sandra Thomas and Vijay Babu, the producer duo was much-talked about for their strong friendship and the films they made under the banner Friday Film House. Sadly, the friendship has now ended on a sour note. Recently, Sandra Thomas filed a police complaint against Vijay Babu at Elamakkara police station, alleging that he assaulted and threatened her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil