twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தவறாக வரலாற்றை பதிவு செய்பவர்களை எதிர்த்து போராடி வெறுத்துடுச்சு: மேதகு குறித்து பிரபல தயாரிப்பாளர்!

    |

    சென்னை: தவறாக வரலாற்றை பதிவு செய்பவர்களை எதிர்த்து போராடி வெறுத்து போய்விட்டதாக பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

    விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள 'மேதகு'. இந்த திரைப்படம் நேற்று BS Value என்ற ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

    மாடத்தி - தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பு!.. சினிமா ரசிகர்கள் பார்த்தே தீர வேண்டும் மாடத்தி - தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பு!.. சினிமா ரசிகர்கள் பார்த்தே தீர வேண்டும்

    இயக்குநர் கிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கதை, திரைக்கதை, வசனம் அமைத்து 'மேதகு' படத்தை இயக்கியுள்ளார்.

    பிரபலங்கள் ஆதரவு

    பிரபலங்கள் ஆதரவு

    ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் ட்விட்டி வருகின்றனர். அந்த வகையில் சத்யராஜ், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், இயக்குநர் நவீன் முகமதலி, சேரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    வெறுத்துப்போச்சு

    வெறுத்துப்போச்சு

    இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மேதகு படத்திற்கு ஆதரவாக ட்விட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டில், தப்பும் தவறுமாக வரலாற்றைப் பதிவு செய்பவர்களை எதிர்த்துப் போராடி வெறுத்துப் போச்சு. சரியான ஒரு படைப்பை எதிர்பார்த்திருந்தோம். மேதகு படம் நாம் பார்த்துக் கொண்டாட வேண்டிய பதிவு. அவசியம் கொண்டாடுவோம். BsValue App இல் என பதிவிட்டுள்ளார்.

    உலகுக்கு உரக்கச் சொல்லும்

    உலகுக்கு உரக்கச் சொல்லும்

    இதேபோல் இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் பதிவிட்டுள்ள ட்விட்டில் ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக மேதகு படம் உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான உலகளாவிய நற்பார்வை பெருக இந்தப் படம் மகத்தான வெற்றி பெற வேண்டும்.. வெல்வோம்.. என பதிவிட்டுள்ளார்.

    தனி துணிச்சல் வேண்டும்

    தனி துணிச்சல் வேண்டும்

    இதனிடையே இயக்குநர் வெற்றிமாறன், வெளியிட்டுள்ள வீடியோவில் இப்படி ஒரு களத்தில் படத்தை இயக்க தனி துணிச்சல் வேண்டும் என இயக்குநர் கிட்டுவை பாராட்டியுள்ளார். இதனிடையே #மேதகு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

    English summary
    Producer Suresh Kamatchi has twitted about Methagu movie. He says we hate to fight against who record the history error.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X