»   »  விஷால் வருத்தம் தெரிவித்தால் இடைநீக்க ரத்து பற்றி பரிசீலிப்போம்! - தயாரிப்பாளர் சங்கம்

விஷால் வருத்தம் தெரிவித்தால் இடைநீக்க ரத்து பற்றி பரிசீலிப்போம்! - தயாரிப்பாளர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஷால் மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவித்தால் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பத்திரிகைப் பேட்டியில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை மோசமாக சித்தரித்துப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

Producers concil stand on Vishal's suspension

இந்த வழக்கு நீதிபதி எம்.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "நடிகர் விஷால் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். இதை அவர் செய்யவில்லை என்று மறுப்புத் தெரிவித்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், அவர் பேசியது பத்திரிகையில் செய்தியாக வெளியாகியுள்ளது.

தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் விஷால் கூறினால், அவரது இடைநீக்கம் உத்தரவை மீண்டும் பரிசீலிக்கலாம்," என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுகுறித்து விஷால் தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளி வைத்தார்.

English summary
Producers Council says that whether Vishal conveyed a regret or apology, the council could reconsidering his suspension.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil