»   »  விவசாயிகளுக்கான பந்த்... தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு... நோ ஷூட்டிங்!

விவசாயிகளுக்கான பந்த்... தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு... நோ ஷூட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளின் நலன் காக்க வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Producers Council also supports Farmers Bandh

இதுகுறித்து அச் சங்கத்தின் பொதுச் செயலர் கதிரேசன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் குடும்பங்களை அரவணைக்கவும் மத்திய, மாநில அரசுகள் ஆதரவுகரம் நீட்டவேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 25.04.2017-அன்று அனைத்து கட்சிகளின் சார்பாகவும், அறிவித்துள்ள அறப்போராட்டத்திற்கு எங்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்த கலையுலகினர் சார்பாகவும் ஆதரவை தெரிவிக்கிறது என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டுமே இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

English summary
Tamil Film Producers Council is also extending its support to farmers one day strike on April 25th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil