»   »  நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து எர்ணாகுளத்தில் மலையாள திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரபல நடிகையை அவரது கார் டிரைவரே திட்டமிட்டு கடத்தி, இரண்டு மணி நேரம் பாலியல் தொல்லைக் கொடுத்து, ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளான்.

Protest in support of molested actress

இந்த சம்பவத்தால் ஏராளமான இளம் நடிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைக் கண்டித்து நேற்று எர்ணாகுளத்தில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் எந்தப் பிரபலத்துக்கும் நடக்கலாம். எனவே இனி இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி, திலீப், ஜெயசூர்யா, மஞ்சு வாரியார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

English summary
Malayalam film industry has staged a protest in support of actress who got molested and urged the police to take severe action against persons who tortured the actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil