»   »  ஆக, பாண்டிச்சேரி அரசு கபாலி டிக்கெட் விற்க ஆரம்பிச்சிடுச்சி!

ஆக, பாண்டிச்சேரி அரசு கபாலி டிக்கெட் விற்க ஆரம்பிச்சிடுச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவை வேகமாக அரித்துக் கொண்டிருக்கும் திருட்டு டிவிடி மற்றும் வீடியோ தயாராகும் இடம் புதுச்சேரிதான். எந்தப் படமாக இருந்தாலும் ரிலீசாகும் அன்றே அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் முன்பே இங்கு திருட்டு விசிடி வந்துவிடும்.

புதுவையில் திருட்டு விசிடி தயாரிப்பு ஒரு குடிசைத் தொழில் ரேஞ்சுக்கு நடந்து வருவதால், அதனைத் தடுக்கக் கோரி தமிழ் திரைப்படத் துறையினர் பலமுறை புதுவை அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

Pudhucherry govt's gift to public servants

இப்போது புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமியிடம் சமீபத்தில் ரஜினியின் கபாலி பட புதுவை விநியோகஸ்டர் லெஜன்ட் மீடியா செல்வகுமார் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த இருவரும் 'திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் தங்களது ஏரியாவைச் சுத்தமாக வைத்திருப்போருக்கும், அதற்கு முனைப்பாக செயல்படும் அரசு ஊழியர்களுக்கும் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட்களை வழங்கப் போவதாகவும் ஆளுநரும் முதல்வரும் தெரிவித்தனர்.

எப்படியோ... கபாலியால பாண்டிச்சேரி சுத்தமானா இன்னும் நல்லதுதானே!

English summary
The Govt of Podicherry has announced free Kabali tickets for those who keep the city clean.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil