twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "புலி"யைப் பார்த்து குடும்பத்தோடு சிரித்தோம்.. டி.ராஜேந்தர்

    By Manjula
    |

    சென்னை: புலி படத்தைப் பற்றி தவறான வதந்திகளை நிறைய பேர் பரப்புகிறார்கள் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைபட்டால் நானே அதற்கான முயற்சிகளில் இறங்குவேன் என்று இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்து இருக்கிறார்.

    சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியான புலி திரைப்படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    படம் ஓடினாலும் ரசிகர்கள் படத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களை கிரியேட் செய்தும் சமூக வலைதளங்களில் படத்தை கிண்டலடித்தும் வருகின்றனர்.

    புலி

    புலி

    கடந்த 1 ம் தேதி வெளியான புலி திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தைப் பாராட்டினார். மேலும் ஜீவா, தமன்னா மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோரும் படம் நன்றாக இருப்பதாக கருத்துத் தெரிவித்தனர்.

    குடும்பத்துடன் புலி பார்த்த டி.ராஜேந்தர்

    குடும்பத்துடன் புலி பார்த்த டி.ராஜேந்தர்

    இந்நிலையில் இயக்குநர் டி.ராஜேந்தர் தனது மனைவி மற்றும் மகளுடன் சமீபத்தில் திரையரங்குக்கு சென்று புலி படத்தைப் பார்த்தார். படத்தைப் பார்த்த பின் அவர் அளித்த பேட்டியில் "புலி வழக்கமான படம் இல்லை, சமீப காலத்தில் இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை. என் படங்களுக்கு பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்துவேன். அதே போன்று புலி படத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட்களை பார்த்து பிரமித்து போனேன், கிராபிக்ஸ் மிகவும் நன்றாக இருக்கிறது.

    வித்தியாசமான படம்

    வித்தியாசமான படம்

    புலி படத்தில் கரும்புலி, பேசும் பறவை, ஆமை, நகரும் பாறை என்று வித்தியாசமாக யோசித்து இருக்கிறார்கள். காட்சிகளை அழகாக காட்டி கதை சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. புதிய விஷயங்கள் நிறைய உள்ளன, படம் நன்றாக இருக்கிறது.

    குழந்தைகளைக் கவரும்

    குழந்தைகளைக் கவரும்

    குழந்தைகளுடன் சென்று குடும்பமாக ரசித்து மகிழும் வகையில் புலி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் இந்த படத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என்று அனைவரும் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் இந்த படத்தை கண்டுகளித்து, சிரித்து மகிழ்ந்தோம்.

    தவறான நடவடிக்கையில்

    தவறான நடவடிக்கையில்

    சிலர் வேண்டும் என்றே புலி படத்தைப் பற்றி தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவிக்கிறார்கள். அவர்கள் ரசிக்கத் தெரியாதவர்கள் ரசனை இல்லாதவர்கள் பொறாமை காரணமாக இப்படி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நானே அதற்கான முயற்சிகளில் இறங்குவேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.

    English summary
    "Puli is a Fantastic Film, i Really Enjoyed My Family. Some Peoples Spreads Wrong Statements For Puli Movie to take a legal action for these kind of Peoples" T.Rajendar Says in Recent Interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X