»   »  லாலேட்டன் பாட்டுக்கு ஆஸ்கர் கிடைக்குமா..? - ரசிகர்களின் கடைசி நம்பிக்கை!

லாலேட்டன் பாட்டுக்கு ஆஸ்கர் கிடைக்குமா..? - ரசிகர்களின் கடைசி நம்பிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
படம் கோட்டை விட்டாச்சு பாடலுக்காவது கிடைக்குமா ஆஸ்கர் ?- வீடியோ

ஆஸ்கர் விருது 2018-ம் ஆண்டுக்கான போட்டியில், மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'புலி முருகன்' படத்தில் இருந்து, ஜேசுதாஸ் - சித்ரா பாடிய 'காலனையும் கால்சிலம்பே' மற்றும் வாணி ஜெயராம் பாடிய 'மானத்தே மாடக்குரும்பே' ஆகிய இரண்டு பாடல்கள் இடம் பிடித்துள்ளன.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பாடல்கள் பிரிவில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தேர்வாகியிருக்கும் ஒரே படம் 'புலி முருகன்' மட்டும் தான். இந்தப்படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் கோபிசுந்தரின் அதிரவைக்கும் பின்னணி இசையும் பாடல்களும் முக்கிய பங்கு வகித்தன.

Puli murugan songs in oscar race

இந்தப்படத்திற்கான பாடல்களையும், பின்னணி இசையையும் கோபிசுந்தரும், 'புலி முருகன்' இயக்குனர் வைசாக்கும் சுமார் ஒருமாத காலம் சென்னையில் தங்கி உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட பாலிவுட் படமான 'நியூட்டன்' இறுதிச் சுற்றுக்கு தேர்வாகாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் பிரிவிலாவது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதைத் தட்டிவிட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

English summary
The Oscar Award for the year 2018 featured Mohanlal's last year release 'Puli Murugan' songs. Two songs 'Kaalanaiyum kaalsilambe' and 'maanathe maadakurumbe' from 'Puli murugan' was selected. The only film that has been chosen in song section from India to participate in the Oscars is the Puli Murugan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X