»   »  கவலை வேண்டாம் புலி திட்டமிட்டபடி வெளியாகும் - சரத்குமார்

கவலை வேண்டாம் புலி திட்டமிட்டபடி வெளியாகும் - சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் நடிப்பில் இன்று வெளியாக விருந்த புலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் நேற்று அவரது வீட்டில் நடந்த வருமான வரி சோதனை காரணமாக தள்ளிப் போனது.

மேலும் நண்பகல் 12 மணியளவில் புலி திரைப்படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகினர்.


Puli releasing as scheduled - says Sarathkumar

இந்நிலையில் அரசியல்வாதியும், தற்போதைய நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் விஜய் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். புலி திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று சற்றுமுன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்." விஜய் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி புலி திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும். புலி படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த சிக்கலில் இருந்து விடுவித்த நடிகர் விஜய் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.


நடிகர் சரத்குமாரின் இந்த அறிவிப்பால் தற்போது விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் புலி படத்தைப் பார்க்க திரையரங்குகள் முன்னால் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.


English summary
"Puli releasing as scheduled good news to all the fans and well wishers, a personal thanks to Vijay for helping the producer to overcome this" says Sarathkumar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil