»   »  ஆந்திராவில் வேட்டையாடும் 'புலி'

ஆந்திராவில் வேட்டையாடும் 'புலி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் குழுவினர் தற்போது ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் முகாமிட்டு சூட்டோடு சூட்டாக அங்கே படப்பிடிப்பை நடத்தி வருகின்றனராம்.

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்து வரும் படம் புலி. இந்த படத்தை பி.டி.செல்வகுமார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சிம்புத்தேவன் இயக்கும் புலி இவ்வருடம் கோடை விடுமுறையில் தனது வேட்டையை தொடங்கும் என்று என கூறப்படுகிறது.

கடப்பாவில் சூட்டிங்

கடப்பாவில் சூட்டிங்

புலி படக்குழுவினர் கடப்பா பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளனர். இந்த பகுதியில் இன்னும் பத்து நாட்களுக்கு படப்பிடிப்பு இருக்குமாம். இங்கு படத்தின் ஒருசில முக்கிய காட்சிகளை சிம்புதேவன் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

கேரளா - பஞ்சாப்

கேரளா - பஞ்சாப்

கடப்பாவை அடுத்து சென்னையிலும், அதன்பின்னர் கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேவிஸ்ரீ பிரசாத்

தேவிஸ்ரீ பிரசாத்

புலி படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2014ஆம் ஆண்டு வீரம் படத்திற்கு இசையமைத்த அவர் 2015ல் புலி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கார்டூனாக வரைந்து

கார்டூனாக வரைந்து

புலி படத்தின் கதையை கார்டூனாக வரைந்து வைத்துள்ளாராம் சிம்புத்தேவன். இதை பார்த்து எளிதாக இசையமைத்துள்ளாராம் தேவிஸ்ரீ பிரசாத்.

ஆறில் இரண்டு

ஆறில் இரண்டு

இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கிறதாம். இரண்டு பாடல்களை முடித்துவிட்டாராம். ஒரு பாடலின் படப்பிடிப்பே முடித்துவிட்டது.

தங்க மோதிரம் பரிசு

தங்க மோதிரம் பரிசு

'புலி' படத்திற்காக அற்புதமான டியூன்களை போட்ட தேவிஸ்ரீ பிரசாத்துக்கு படத்தயாரிப்பாளர் தங்க மோதிரம் பரிசு வழங்கினாராம்.

வீரத்தை மிஞ்சவேண்டும்

வீரத்தை மிஞ்சவேண்டும்

வீரம் படத்தை விட புலி படத்தின் இசை மிகப்பெரிய ஹிட் ஆகவேண்டும் என்று விஜய் ரசிகர்கள் விரும்புகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

English summary
Vijay is riding high after the success of ‘Kaththi‘ and the actor is currently busy with his upcoming socio-fantasy and action entertainer ‘Puli‘. The team is currently shooting in Kadapa district in Andhra Pradesh. Devi Sri Prasad is composing the music for ‘Puli’ and the producers of this film have surprised DSP by gifting him a gold ring.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil