»   »  பாசக்காரவங்களுக்கு நான் பனி… பகையாளிக்கு நான் புலி…

பாசக்காரவங்களுக்கு நான் பனி… பகையாளிக்கு நான் புலி…

Posted By:
Subscribe to Oneindia Tamil

புலி வருது... புலி வருது.... என்று சொல்லி சொல்லியே நேற்று முழுவதும் டுவிட்டர்வாசிகள் பொழுதை ஓட்டினார்கள். நள்ளிரவு 12 மணிக்கு புலி டிரெயிலர் வெளியானதுதான் தாமதம். ரிலீஸ் ஆன எட்டு மணிநேரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். காலை 8 மணிநேர நிலவரப்படி புலி டிரெயிலரை 3,43,692 விஜய் ரசிக கண்மணிகள் பார்த்துள்ளதாக சொல்கிறது யு டுயூப் தகவல்.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

டிரெயிலரை பார்த்த வரைக்கும் நான் ஈ வில்லன் சுதீப்பும் ஸ்ரீதேவியும்தான் அசத்தலாக ஓபனிங். 50 வயதிலும் அழகாயிருப்பது ஸ்ரீதேவிதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.


சுதீப்பின் கம்பீரம்... வில்லத்தனமான பார்வை... விஜய் ஓபனிங் எல்லாம் சரிதான். அந்த கடைசி பஞ்ச் டயலாக்தான் ஓட்டி எடுக்கப்போகிறார்கள் என்பது போல தெரிகிறது. நம் பார்வையை விடுங்கள் நம்ம டுவிட்டர் கண்மணிகள் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்று காலையில் பார்த்தோம் புலி மீம்ஸ் போட்டு சும்மா கலாய்க்கிறார்கள் மாமே...


ஹிட்டு… ஹிட்டு…

நள்ளிரவில் வந்தாலும் விடாமல் பார்த்து அதை டிரெண்ட் ஆக்குவோம் என்பது விஜய் ரசிகர்களின் கமெண்ட்.


நீங்க அடிச்சு ஆடுங்க பாஸ்

விஜய் மீது இவருக்கு என்ன கோபமோ தெரியலையே? இதற்கு சமூகம் பொறுப்பல்ல.


புலி வருது…

விஜய் நடித்த வேட்டைக்காரனின் புலி உருமுது படத்தின் பாடலை இதற்கு போட்டிருக்கிறலாமோ?


அடிச்சான் பாரு டயலாக்

கடைசி பஞ்ச் டயலாக்கிற்கு வலைஞர் ஒருவரின் கமெண்ட்


ரசத்துக்கு கரைப்பாங்களோ?

சும்மாவே கரைச்சு ஊத்துவாங்க.... இன்னைக்கு ரொம்ப புலியை கரைப்பாங்க போல இருக்கே.


இது அஜீத் ரசிகர்களுக்கோ

நேத்தே ஆமைகளை பொறிக்க சொன்னாங்க... புலி டிரெயிலர் வெளியான உடனே நிறைய ஆமைகள் செத்து போயிருச்சாமே.


English summary
The Puli trailer seems to be too focused on Vijay’s heroics and boasting its amazing visuals, that we hardly get to see the other important characters played by Sridevi and Kiccha Sudeep.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil