twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேய்த்தனமா இருக்கும்.. மாஸ்டர் படத்தில் தன்னோட கேரக்டர் பற்றி.. மனம் திறந்த மக்கள் செல்வன்!

    |

    சென்னை: டைட்டிலிலேயே தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி என போடப்பட்டுள்ள மாஸ்டர் படத்தில், தன்னுடைய கேரக்டர் எப்படி இருக்கும் என நடிகர் விஜய்சேதுபதி மனம் திறந்து கூறியுள்ளார்.

    மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின், அடுத்த மாஸ்டர் பீஸை பார்க்க விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக் காத்துக் கிடக்கின்றனர்.

    ஆனால், தொடரும் லாக்டவுன் படத்தின் ரிலீஸை தீபாவளி வரை தற்போதைக்கு தள்ளிப் போட்டிருக்கிறது.

    ஏசுவை லெஸ்பியனாக சித்தரிப்பதா? மைக்கேல் ஜாக்சன் மகள் படத்துக்கு உலகளவில் வலுக்கிறது கண்டனம்!ஏசுவை லெஸ்பியனாக சித்தரிப்பதா? மைக்கேல் ஜாக்சன் மகள் படத்துக்கு உலகளவில் வலுக்கிறது கண்டனம்!

    வில்லன் ரோல்

    வில்லன் ரோல்

    ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் மிரட்டி வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு இணையாக நடித்து மிரட்டிய விஜய்சேதுபதி பலரது பாராட்டுக்களையும் அள்ளினார். ரஜினியின் பேட்ட படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில், மாஸ்டர் படத்திலும் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

    எகிறும் எதிர்பார்ப்பு

    எகிறும் எதிர்பார்ப்பு

    பொதுவாக தளபதி விஜய் படம் என்றாலே, மொத்த வெயிட்டும் அவர் மீதே இறங்கி இருக்கும். எல்லா ஃபிரேம்களிலும் தனி ஆளாக கலக்கி ஸ்கோர் செய்வது வழக்கம். ஆனால், மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், விஜே ரம்யா, செளந்தர்யா, அர்ஜுன் தாஸ் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ள நிலையில், படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    டபுள் ஹீரோ சப்ஜெக்டா

    டபுள் ஹீரோ சப்ஜெக்டா

    மாஸ்டர் படத்தின் டைட்டிலில் விஜய்சேதுபதிக்கும் சரி சமமாக இடம் கொடுத்துள்ள நிலையில், விக்ரம் வேதா படத்தை போலவே இதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்டா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூட தனது ரோல் குறித்து அதிகம் பேசாத விஜய்சேதுபதி, சமீபத்தில் நடந்த இன்ட்ராக்‌ஷன் ஒன்றில் தனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

    பேய்த்தனமான வில்லன்

    பேய்த்தனமான வில்லன்

    பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடித்தால், வில்லனாக நடிக்கும் ஹீரோவையும் நல்லவனாகவே சித்தரித்தே திரைக்கதையை இயக்குநர்கள் எழுதி இருப்பார்கள். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெறும் நடிப்புக்காக எதையும் செய்ய துணியும் விஜய்சேதுபதியை இந்த படத்தில் பேய்த்தனமான வில்லனாக மட்டுமே காண்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

    வாழ்வா? சாவா?

    வாழ்வா? சாவா?

    தளபதி விஜய்க்கும், மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கும் படத்தில் வாழ்வா? சாவா? போராட்டம் இருக்கும் என்றும், யாரை, யார் வீழ்த்துவார் என்ற ரேஞ்சுக்கு கிளைமேக்ஸ் சண்டை வெறித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரில் இருவரும் ரத்தம் தெறிக்க மோதிக் கொள்ளும் காட்சியே படத்தின் பலத்தை உணர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    For the first time now, in a live interaction talking about his role in 'Master', Vijay Sethupathi has revealed that that are no grey shades in his character what so ever and that his character is completely evil in nature.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X