தளபதி 69, 70 படங்களை இயக்கப் போறது இவங்க தானா? எதிர்பார்ப்பை கிளப்பிய பூஜை வீடியோ!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவில் திடீரென சில இயக்குநர்கள் கலந்து கொண்டதை பார்த்து விஜய் ரசிகர்கள் ஸ்டன் ஆகி உள்ளனர். அடுத்தடுத்த படங்களின் இயக்குநர்களை புக் செய்து விட்டாரா நடிகர் விஜய் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் மீண்டும் அதே இயக்குநருடன் தளபதி 67 படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.

தளபதி 68 திரைப்படத்தை இயக்குநர் அட்லீ இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், தளபதி 69 மற்றும் தளபதி 70 படங்களுக்கான இயக்குநர்களையும் நடிகர் விஜய் முடிவு செய்து விட்டாரா என்றும் ரசிகர்கள் தளபதி 67 பூஜை வீடியோவில் தென்பட்ட இயக்குநர்களை வைத்து கணிக்கத் தொடங்கி உள்ளனர்.

அட்வான்ஸ் புக்கிங்

அட்வான்ஸ் புக்கிங்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சீனியர் நடிகர்களே கைவசம் பல படங்களை அடுத்தடுத்து வைத்துக் கொண்டு இந்த வயதிலும் பாக்ஸ் ஆபிஸை துவம்சம் செய்து வரும் நிலையில், அடுத்த ஜெனரேஷன் நடிகர்களான விஜய், அஜித் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் அட்வான்ஸ் புக்கிங்கில் பல படங்களை புக் செய்து வைத்துக் கொண்டு படங்களில் நடித்து வருகின்றனர்.

பூஜையில் புஷ்கர் காயத்ரி

பூஜையில் புஷ்கர் காயத்ரி

விக்ரம் வேதா படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த புஷ்கர் காயத்ரி இந்தியிலும் அந்த படத்தை ஹ்ரித்திக் ரோஷனை வைத்து இயக்கி இருந்தனர். இந்நிலையில், தமிழில் தங்களின் அடுத்த படத்தை இதுவரை அறிவிக்காமல் இருக்கும் அவர்கள் தளபதி 67 படத்தின் பூஜையில் கலந்து கொண்டதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இருக்குமோ என எதிர்பார்ப்பு குதிரையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்பு

கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்பு

புஷ்கர் காயத்ரியை போலவே பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இந்த பூஜையில் பங்கேற்றுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜும் சீக்கிரமே விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாரா என்றும் ரசிகர்கள் கெஸ் பண்ண ஆரம்பித்துள்ளனர்.

அட்லீயுடன் தளபதி 68

அட்லீயுடன் தளபதி 68

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் அட்லீயுடன் தளபதி 68 படத்தை பண்ணப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அஜித்தின் ஏகே63 படத்தையும் அட்லீ பண்ணப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 69

தளபதி 69

தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லீயுடன் விஜய் பண்ணும் பட்சத்தில் அதன் பிறகு தளபதி 69 படத்தை புஷ்கர் காயத்ரியுடன் பண்ணுவாரா விஜய் என்கிற கேள்வி தளபதி 67 பட பூஜையில் புஷ்கர் காயத்ரி பங்கேற்ற நிலையில், கோலிவுட்டில் வலுவாக எழுந்துள்ளது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் விஜய்யுடன் படம் பண்ண விருப்பம் என இருவரும் தெரிவித்து இருந்தனர்.

தளபதி 70 இயக்குநர்

தளபதி 70 இயக்குநர்

மேலும், நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் பங்கேற்ற நிலையில், தளபதி 70 படத்தை அவர் இயக்கவும் வாய்ப்புகள் அதிகம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், ஆர்.ஜே. பாலாஜியிடமும் நடிகர் விஜய் ஒரு கதையை கேட்டு ரெடி பண்ண சொல்லி இருக்கிறார். கூடிய விரைவிலேயே நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்களின் ஹாட் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X