»   »  தமிழ் சினிமாவுக்கு குட்பை? - பிவிபி நிறுவனம் விளக்கம்

தமிழ் சினிமாவுக்கு குட்பை? - பிவிபி நிறுவனம் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நான் ஈ', 'விஸ்வரூபம்', 'பெங்களூரு நாட்கள்', 'தோழா' போன்ற படங்களைத் தயாரித்த பிவிபி நிறுவனம், தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறப் போவதாக ஒரு செய்தி பரபரப்பாக பரவி வருகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம்:

"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தகவல். இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத் தளங்களில் மற்றும் ஊடங்களில் பரவி கொண்டு வருகிறது. தோல்விகளை கண்டிராத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்த தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும்.

PVP cinemas quits Tamil Cinema?

ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறைதான் சினிமா. அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்களுக்காக பாரம்பரியமிக்க எங்கள் நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது.

பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குனரின் கூட்டணியில் உருவாகும் ஒரு படம் அடுத்து எங்களின் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். அதுமட்டுமின்றி, பிவிபி சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது," என குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
PVP Cinemas has denied the rumours about their exit from Tamil Cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil