»   »  மாதவனின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி வைப்பாரா சஞ்சீவ் கபூர்?

மாதவனின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி வைப்பாரா சஞ்சீவ் கபூர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் மாதவனுக்கு பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூருடன் சேர்ந்து உணவகம் ஒன்றை துவங்கும் ஆசை வந்துள்ளது.

மாதவன் தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துடன் சேர்ந்து தனு வெட்ஸ் மனு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட்டானதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர்.

ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ள அந்த படத்தை விளம்பரப்படுத்த கங்கனாவும், மாதவனும் மாஸ்டர் செஃப் இந்தியா 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு சென்றனர்.

கங்கனா

கங்கனா

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தில் கங்கனா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவர் அடக்க ஒடுக்கமான பெண்ணாகவும், அதிகாரம் தூள் பரத்தும் பெண்ணாகவும் நடித்துள்ளார். நம்ம மாதவன் பாவப்பட்ட கதாபாத்தித்தில் அநியாத்திற்கு நல்லவராக நடித்துள்ளார்.

மாதவன்

மாதவன்

மாஸ்டர் செஃப் இந்தியா 4 நிகழ்ச்சிக்கு கங்கனா ஒரு கவுன் அணிந்து ஏதோ வித்தியாசமாக முயற்சிக்கிறேன் என்ற பெயரில் தலைமுடியை என்னவோ செய்திருந்தார். மாதவன் கருப்பு நிற கோட், சூட்டில் அம்சமாக வந்திருந்தார்.

பானி பூரி

பானி பூரி

க்வீன் படத்தில் உணவு போட்டியில் கலந்து கொண்ட கங்கனா பானி பூரி செய்வார். தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலும் அவரும், மாதவனும் சேர்ந்து பானி பூரியை செய்யவில்லை மாறாக பரிமாறினர்.

உணவகம்

உணவகம்

உணவகம் ஒன்றை அமைத்து நடத்த வேண்டும் என்பது மாதவனின் கனவாம். அந்த கனவு உணவகத்தை அவர் தனியாக அல்ல மாறாக பிரபல சமையல் கலைஞரான சஞ்சீவ் கபூருடன் சேர்ந்து நடத்த ஆசைப்படுகிறார்.

தனு வெட்ஸ் மனு

தனு வெட்ஸ் மனு

தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகம் வரும் மே மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. மாதவன் தற்போது சாலா கடூஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

English summary
Actor Madhavan wants to start a restaurant with top chef Sanjeev Kapoor.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil