»   »  மிஸ்டர் பார்த்திபன்... தமிழை உயிரோட விடுங்க, ப்ளீஸ்!

மிஸ்டர் பார்த்திபன்... தமிழை உயிரோட விடுங்க, ப்ளீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீப் பாட்டுக்கு பாசிடிவ் பதில் பாட்டு என்ற பெயரில் ஆளாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் - நடிகர், அவ்வப்போது கவிதைக் கிறுக்கன் பார்த்திபனும் தன் பங்குக்கு ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல்.. 'வெட்டுகுத்து' தமிங்கிலீஷில் வந்திருக்கும் அதை படித்து நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்.

தன் பாடல் குறித்து அவர் இன்று அனுப்பியிருக்கும் ஒரு அறிமுக அறிக்கை இது:

BEEP sound மகாபாரதித்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை திரு சிவக்குமார் சொற்பொழிவில் கண்டு கொண்டேன்.

R Parthiban's Beep Song

அஸ்வதாம யானை கொண்றுவிட்டேன் என்று
சொல்ல செய்து 'யானை' என்ற வார்த்தையின்
மீது பகவான் கிருஷ்ணன்
BEEEEP (சங்கு) ஊதி அந்த வார்த்தையை அமுக்கி அப்போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு உத்தியாக பயன்படுத்தி இருக்கிறார். அப்படி இப் பாரதத்தில் இந்த சாதா/ராதாகிருஷ்ணன் வெள்ள சேதத்தையும்,
2015-ல் உள்ள 'உள்ள'சேதத்தையும் ஒரு முடிவுக்கும் அடுத்து பிறக்கும் விடிவுக்கும் (sweet 16)
வெளிச்சம் பாய்ச்ச எந்த ஆபாச வார்த்தையின் மீதும் beep sound போடாமல்
'பீப் பீப் பீப்பி ஊதுடா
Hap hap happy tune-னிலே
தூக் தூக் தூக்கி போடுடா- உன்
சோகத்தை dust bin-னிலே" என அனுபல்லவி எழுத து'வங்கி' yeah தன் வங்கி கணக்கிலிருந்து சில லட்சங்களை களவாடி அதில் பல்லவி பாடியிருக்கிறார் இப்படி...

"துக்கம் என்பது shit-டுதான்
துடைக்க tissue போதுன்டா- don't
Make it big issue டா
டா டா டடாடா - இந்த
டான்சே tasmac போதைடா
போதைடா ஆடுடா நீ ஆடுடா"
போதையில ஆடாதே- மகிழ்வோட
ஆட்றதே real போதை என்ற tasmac -க்கு எதிராக பொங்கும் பெண்பால் பால் உள்ள அன்பாலும்,
சலிப்பை துப்ப அடிக்கடி "Shit' என பீத்திக்கொள்ளும் youth சமூகத்தை லாவகமாக வளைத்து போட்டு. 'அதற்கு' எப்படி tissue போதுமோ அவ்வளவு தான் துக்கமும் என்று அந்த issue துடைத்து எறியப்பட்டிருக்கிறது.

எதையும் நாம் இழக்கவில்லை
எல்லோருமே இன்று லாபத்தில்தான்
"வந்த நாளில் அம்மணம்
வாழம் போதோ கோமணம்
கணக்கு பாத்தா லாபம் தான் "

-என
தத்(துவ)தாட்டமும்
குத்தாட்டமும் நிறைந்த
கொண்டாட்டமாய்
சத்யா இசையில்
நான் இயற்றி sorry எழுதி
'BEEP 2016' என்ற ஈர்ப்பு திசையில்
'த்துதா
மகித
லகுதா '
என்ற பாடலை நான் என் சொந்தமாக
துவங்கியுள்ள ME&YOUtube channel மூலம்
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின்
பார்வைக்குள் பதிவிடுகிறேன்.
நன்றி!


C - repeat and share pls
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

குறிப்பு: மிஸ்டர் பார்த்திபன், இவ்வளவு இங்கிலீஷ் வார்த்தை சேர்க்காமல், நல்ல தமிழிலேயே சிலேடை வரிகளை எழுத முடியும். எதற்கு இந்த கடமுடா முயற்சி.. தமிழை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்!

English summary
Here is another Beep Song written by director Radhakrishnan Parthiban.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil