ராதிகாவை நான் ஏன் அம்மான்னு கூப்பிடனும்...ஓப்பனாக பேசிய வரலட்சுமி
சென்னை : பேட்டிகளில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதை பெரும்பாலும் தவிர்க்கும் நடிகை வரலட்சுமி, தற்போது ராதிகா பற்றியும், தங்களிடையேயான உறவு பற்றியும் ஓப்பனாக பேசி இருப்பது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தென்னிந்திய மொழி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு தமிழ் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
தெலுங்கு, கன்னடத்தில் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன. இவரது நடிப்பையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். சண்டைக்கோழி 2, சர்க்கார் படங்களுக்கு பிறகு தமிழில் தற்போது வில்லி கேரக்டர்களுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் வரலட்சுமியாக தான் இருக்கிறார்.

வரலட்சுமி கைவசமுள்ள படங்கள்
தற்போது தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய 5 படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இது தவிர தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் யசோதா, தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகி வரும் சபரி, கன்னடத்தில் லகாம், தெலுங்கில் ஹனு மேன் என கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருகிறார்.

வரலட்சுமி ஓப்பன் பேட்டி
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராதிகாவின் மகள் ராடனுக்கு சோஷியல் மீடியாவில் குடும்பம் பற்றி வரும் மோசமான கமெண்ட்ஸ் பற்றி வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வரலட்சுமி, ராடன் மிகவும் ஸ்டிராங்கான பொண்ணு. இது போன்ற கமெண்ட்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

ஏன் ராதிகாவை அம்மான்னு கூப்பிடனும்
சிலர் என்னை கேட்கிறார்கள், நீங்க ஏன் ராதிகாவை ஆன்டி என்று கூப்பிடுகிறீர்கள். அம்மா என்று கூப்பிட வேண்டியது தானே என்று. நான் எதற்காக ராதிகாவை அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் ஒன்றும் எனக்கு அம்மா கிடையாது. எனது அப்பாவின் இரண்டாவது மனைவி. அவ்வளவு தான்.

ராதிகாவை வெறுக்கவில்லை
ராதிகா மீது எனக்கு கோபம். அவரை எனக்கு பிடிக்காது. நான் அவரை வெறுக்கிறேன் என பலர் கூறி வருகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அவருக்கும் எனக்கு நல்ல உறவு உள்ளது. இருவரும் சேர்ந்து பணியாற்றுகிறோம். அதனால் அவரை அம்மா என்று எப்படி கூப்பிட முடியும். என்னுடைய அம்மா தான் எனக்கு அம்மா. அவரை தான் நான் அம்மா என்று கூப்பிட முடியும். ஒரு அம்மா தான் இருக்க முடியும்.

என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்
எனக்கு வேறு அப்பா, ராடனுக்கு வேறு அப்பா. அவருடைய அம்மா, எனது அப்பாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு என்னுடைய அப்பா அவருக்கு நல்ல அப்பாவாக இருக்கிறார். எங்கள் குடும்பங்களுக்கு இடையேயான உறவும் நன்றாக தான் உள்ளது. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்.

வரலட்சுமியின் சர்ச்சை கருத்து
குரைக்கிற நாய் கடிக்காது என்பது போல் குரைப்பவர்கள் குரைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். வேலையில்லாதவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். வேறு வேலை இருந்தால் ஏன் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டுக் கொண்டிருக்க போகிறார்கள் என வரலட்சுமி பேசி உள்ளார்.

பெருகும் எதிர்ப்புக்கள்
ராதிகா பற்றியும், குடும்பம் பற்றியும் ஓப்பனாக பேசிய வரலட்சுமியின் பேச்சு வரவேற்பை பெற்றிருந்தாலும், சோஷியல் மீடியாவில் கமெண்ட் போடுவோரை நாய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











