Bigg Boss Tamil 6: எவிக்சன் ஆன ரச்சிதாவுக்கு அடித்த ஜாக்பாட்... சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?

சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிப் பகுதியை எட்டியுள்ளது.

இதுவரை நடந்த சீசன்களில் இதுதான் சுவாரஸ்யம் மிக குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் போட்டியாளர்களில் பலரும் எதுக்கு வீண் வம்பு என Safe Game ஆடுவதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ரொம்பவே பொறுமையாக விளையாடிய ரச்சிதா நேற்றைய தினம் எவிக்சன் செய்யப்பட்டார்.

 பிக் பாஸ் 14வது வாரம்

பிக் பாஸ் 14வது வாரம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 13 வாரங்களை கடந்து இன்று 14வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், ஏற்கனவே 13 பேர் வெளியேறிவிட்டனர். மேலும் ஒரு போட்டியாளரான ரச்சிதா நேற்றைய தினம் எவிக்சன் செய்யப்பட்டார். அதனையடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே உள்ளனர். அடுத்த வாரம் டைட்டில் வின்னர் யார் என்ற ரிசல்ட் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 டார்க்கெட் ஆன அசீம்

டார்க்கெட் ஆன அசீம்

சென்ற வாரத்தின் இறுதி இரண்டு நாட்களும் கமல் எபிசோட் நடைபெற்று முடிந்தது. இதில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குணாதிசயங்கள், தகுதி அடிப்படையில் யார் பெஸ்ட், யார் வொர்ஸ்ட் போன்ற பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதில் வழக்கம்போல கோபம், சண்டை போடுவது, மரியாதை இல்லாமல் பேசுவது, இறுதியாக டைட்டில் பெறவே தகுதி இல்லாதவர் என்ற பல விமர்சனங்களுக்கும் ஆளானார் அசீம். இதனை விக்ரமன், ஏடிகே உட்பட அசீமின் நெருங்கிய நண்பரான கதிரவனும் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

 மைனா நந்தினி Save

மைனா நந்தினி Save

இறுதியாக எவிக்சன் லிஸ்ட்டில் இருந்து விக்ரமன், ஷிவின், ஏடிகே, கதிர், ஆகியோர் சேவ் ஆனார்கள். மைனா நந்தினியும் ரச்சிதாவும் தான் டாப் லிஸ்ட்டில் இருந்தனர். ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் மைனா நந்தினி தான் வெளியேறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் ரச்சிதா தான் எவிக்சன் என்பது இறுதியாக தெரியவந்தது. மற்ற போட்டியாளர்களை போல எவிக்சனை ஜாலியாக எடுத்துக் கொள்ளாமல், பெரிய ஏமாற்றத்துடனும் அழுகையுடனும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ரச்சிதா. பொறுமையாக இருந்து இவ்வளவு தூரம் வந்ததே தனக்கான வெற்றி என பெருமிதமும் கொண்டார்.

 ரச்சிதாவின் சம்பளம்

ரச்சிதாவின் சம்பளம்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதாவின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதா, ஆரம்பத்தில் ரொம்பவே ஸ்லோவாக விளையாடி வந்தார். ஆனால் கடைசி சில வாரங்கள் அவரது விளையாட்டு மிக சுவாரஸ்யமாகவே இருந்தது. முன்னதாக அமுதவாணன் தான் குறைவான வாக்குகளோடு எவிக்சன் ஆகும் நிலையில் இருந்தார். ஆனால் டிக்கெட் டூ பினாலே போட்டியில் வெற்றிப் பெற்றதால், அவர் எவிக்சனில் இருந்து தப்பியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 28,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி மொத்தம் 91 நாட்களுக்கு 26 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X